மனிதன் குணம்
உலகத்தில் பிறக்கும் போது குழந்தை
தான் நாம்
நாம் வளர வளர நம்மோடு
ஒட்டிக்கொள்ளும் ஆசை காமம் உணர்ச்சி அன்பு பாசம் மகிழ்ச்சி
கோபம் பக்தி ஏமாற்றம் பிரிவு நட்பு
இதையெல்லாம் யாரும் சொல்லி தரவில்லை அது தானே நடைபெறுகிறது
பார்வையில் தோன்றும் அழகு
ரசிக்க சொல்லும் எண்ணங்கள்
மற்றவர்கள் வாழ்க்கை பார்ப்பது
நம்முடைய கலாசாரம்
முன்னோர்கள் கடைபிடித்த
வாழ்க்கை முறை
இதைத்தான் செய்கின்றோம
தெரியவில்லை
புது புது ஆசைகள்
புது புது எண்ணங்கள்
புது புது கற்பனைகள்
என் எழுகின்றது தெரியவில்லை
ஒரு தாய் பெற்று எடுத்த குழந்தைகள்
ஒரே மாதிரி குணம் இருப்பதில்லை
மலரும் பூக்களும் ஒரே நிறங்கள்
இருப்பது இல்லை
பூவின் வாசனையும்
வெவ்வேறு தான் இருக்கிறது
மனிதனும் ஒரேமாதிரி இருப்பதில்லை
அவன் ஆசைகளும் ஒரேமாதிரி
இருப்பதில்லை
மனசு நல்லது நினைத்தால்
நல்லதே நடக்கும்
வாழ்க்கையும் உன் கையில்தான்
உள்ளது நீ நல்லவன் ஆவதும்
நீ கெட்டவன் ஆவதும்
உனக்குள் பிறக்கிறது