மலரே மல்லிகை மலரே
மல்லிகையே ..மல்லிகையே
வாசமுள்ள மல்லிகையே ..!!
கன்னியர்கள் விரும்பும்
மல்லிகையே ..!!
காளையர்கள் மயங்கும்
மல்லிகையே ..!!
மங்கையர்கள் தங்களின்
நெஞ்சத்து நாயகனை
நினைத்து கொண்டு
உன்னை மகிழ்ச்சியுடன்
தலையில் சூடிக்கொண்டு
மஞ்சத்துக்கு செல்ல ...!!
அவர்கள் செல்லும் முன்பே
மஞ்சத்தில் இருக்கும்
காளையரின் நெஞ்சத்தில்
மல்லிகையே வாசனையுடன்
நீ குடியேறி விடுகிறாய் ..!!
தன் நிலை மறந்த நாயகன்
தன்னுடைய நாயகியை
அணைத்து கொள்ளும்போது
மல்லிகையே உன்னையும்
சேர்த்து அணைத்து கொள்கிறான் ..!!
தம்பதியர்களின் தனி அறையில்
யாருக்கும் அனுமதி கிடையாது
ஆனால்..
மங்கையர்கள்
விரும்பி சூட்டிக்கொண்ட
மல்லிகை மலரே
நீ மட்டும் விதிவிலக்கு ...!!
--கோவை சுபா