மந்தியாய் மனமும்

கலிவிருத்தம்

கிளைத் தாவும் மந்தியாய் மனமும்
தளைத் தட்டிய கவிதையாய் பிழையுடன்
அளைப் புகுந்த அரவமாய் சுழலவும்
துளைச் சிக்கிய எலியாய் ஆனதே.

நாளியின் வாயில் சிக்கிய தெங்கமாய்
வாளியின் பொத்தலால் நீரொழு குவதுபோல்
கோளியில் கீழே முளைக்க மரமென
தோளியால் கட்டிய வீட்டில் புகுந்ததாய்.

முரணாய் என்றும் குழம்பியே திகிலாய்
உரமுடன் இருக்கின் றபோதும் பயத்திலே
கரத்தில் கத்தியை பிடித்துச் செல்வதாய்
சிரத்தை உடனே மனமும் தொய்வாய்

விம்மிய நிலையில் உறங்கியும் விழித்தும்
சும்மா இருக்கவே நினைத்து சோம்பியே
மும்முறை உண்ணும் மனித மிருகம்
பம்மியே வாழ்தல் என்பது வீண்தான்.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (20-Jun-21, 11:04 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 72

மேலே