கொலுசு

தொட்டில் குழந்தைக்கு ...
விழிப்பதைக் காட்ட...
தவழும் குழந்தைக்கு...
வழிப்பாதையைக் காட்ட...
ஓடும் குழந்தைக்கு...
ஒளிந்த இடம் காட்ட...
என்னவளுக்கு...
வருகையைக் காட்ட...
செய்தவனுக்கு ...
வறுமையைப் போக்க...
இக்கட்டில்... பலருக்கு
ஏழ்மையைப் போக்க...
கொலுசு கட்டுகிறார்கள்
பலவிதமாய்.