ஆலாங்கட்டி நீர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

வெண்மாசி மேகமுடன் வீறும் பெரும்பாடு
கண்மாசி காந்தல் கடிதகற்றுந் - தண்மீறும்
விக்கற் சுவாசமுடன் மெய்மயக்க மும்போக்குங்
கக்குமா லாங்கட்டி காண்

- பதார்த்த குண சிந்தாமணி

சிலேட்டுமப் பிரமேகம், பெரும்பாடு, கண்புகைச்சல், கை கால் எரிவு, விக்கல், மயக்கம் இவைகளை நீக்கும்; குளிர்ச்சியை உண்டாக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Jun-21, 8:32 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

மேலே