சகலமும் சமையலறை

சகலமும் சமையலறை

அம்மா கையால்
விதவிதமா விருந்துண்டு
மருந்துக்குக்கூட சமையல்
செய்யவுந்தா தெரியாது...

கல்யாணம் ஆகிடுச்சு
காலம் தலைகீழாய் மாறிடுச்சு
கொஞ்சம் கொஞ்சமாக
கத்துக்க வேண்டியதாயிடுச்சு...

இப்ப
பார்த்து பார்த்து சமைச்சிடுவேன்,
பக்குவமா செஞ்சிடுவேன்

பையனுக்கு ஒரு விதமா
பாசமானவருக்கு ஒரு விதமா...
பலவிதமா சமைக்கனுமே
விதவிதமா இருக்கனுமே...

பாசம் வெச்சு சமைச்சாலும்
நேசத்தோட சமைச்சாலும்
ருசியும் தான் மாறுதுங்க
மண(ன)மும் தான் தூக்குதுங்க

கடைசியில்
எல்லாம் எல்லாம் எல்லாமுமாய்
சமையலறையே சகலமுமாய்...

-உமா சுரேஷ்

எழுதியவர் : உமா சுரேஷ், திருப்பூர் (22-Jun-21, 9:46 pm)
சேர்த்தது : உமா சுரேஷ்
பார்வை : 42

மேலே