காதல் கிறுக்கன்
கண்ணே உந்தன் பேசும் கண்களில்
கண்டுகொண்டேன் நான் எந்தன் காதல்
விண்ணப்பத்திற்கு நீயளித்த அங்கீகாரம்
இன்னும் தாமதம் ஏனடி உந்தன்
குமுத வாய்திறந்து என்னுடன் பேசிடவே
கொக்கென காத்திருக்கும் நான் இங்கே
கொஞ்சம் இரங்கிடுவாய் பேசிடுவாய் நீ
என்மனம் நிலவென குளிர்ந்திடவே