ஓட்டம் கவிஞர் இரா இரவி

ஓட்டம் ! கவிஞர் இரா .இரவி !

தங்கம் வெள்ளி
பெற்றுத் தரும்
ஓட்டம் !

பயிற்சி எடுத்தால்
பதக்கம் கிட்டும்
ஓட்டம் !

மான் உயிருக்காக
புலி உணவுக்காக
ஓட்டம் !

காவலர் அசந்தால்
கைதி பிடிப்பான்
ஓட்டம் !

ஆற்றின் அழகு
தண்ணீரின் '
ஓட்டம் !

முன்பு எடுத்தனர் இப்போது
எடுக்கமுடியாது வென்றவர்
ஓட்டம் !

திருடனை விட விரைவாக
இருக்க வேண்டும் காவலர்
ஓட்டம் !

கண்களுக்குத் தெரியாமலே
நடக்கிறது குருதியின்
ஓட்டம் !

இளமையில் சரி
முதுமையில் வேண்டாம்
ஓட்டம் !

மோசடி செய்துவிட்டு
சாமியார்கள் எடுப்பது
ஓட்டம் !

வீட்டுக்குத் தெரியாமல் திருமணம்
புரிந்தோர் எடுப்பது
ஓட்டம் !
.

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (23-Jun-21, 9:07 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 43

மேலே