ஆழ்மனதின் எதிரொலி

அரிதாரம் பூசியதும்
அவதாரமென கூறி
அகிம்சை வழியென
அறிவிப்பும் செய்து
பொய்யான மனதுடன்
போலித் தோற்றத்தில்
மெய்யென நம்ப வைத்து
உலாவரும் உள்ளங்களின்
வேடமும் கலைந்திடும்
வேகமும் குறைந்திடும் !


கடந்தகாலம் மறந்தவரின்
நிகழ்கால நாடகங்கள்
எதிர்காலம் கேள்விக்குறி !
நன்றியெனும் சொல்
வார்த்தை மட்டுமல்ல
உயிரான உணர்வு !


புரிந்தும் புரியாததாய்
அறிந்தும் அறியாததாய்
வேடமிட்டுத் திரிபவர்கள்
நேர்மைக்கு எதிர்மறை
உண்மைக்கு எதிர்சொல்
சமுதாயத்தின் எதிரிகள் !


( இது பலருக்கும் பொருந்தும் என்பது எனது தனிப்பட்ட கருத்து .
எனது அனுபவத்தின் வெளிப்பாடு. ஆழ்மனதின் எதிரொலி )


பழனி குமார்
23.06.2021

எழுதியவர் : பழனி குமார் (24-Jun-21, 8:34 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 188

சிறந்த கவிதைகள்

மேலே