ஆயிரத்தில் நான் ஒருவன்

நூற்று முப்பது கோடி மக்களில் நானும் ஒருவன்
கனவில் முப்பது நிமிஷத்திற்கு நானும் தலைவன்

சில கோடி நல்ல மனிதர்களில் நானும் ஒருவன்
என் சிறிய குடும்பத்திற்கு நான்தான் தலைவன்

ஒரு லட்சம் பேரில் நானும் கூட ஒருவன் தான்
ஆனால் எப்போதும் நல்லவனா, சந்தேகம்தான்

பத்தாயிரம் பேரில் கூட நானும் ஒருத்தன்
பக்கத்திலேயே இருக்கான் இன்னொருத்தன்

ஆயிரம் பேர்களில் நானும் ஒருவன் தாங்க
அப்படின்னு சொல்லுங்க, 10 ரூபாய் இந்தாங்க

என்னாங்க, நூத்துல நான் ஒண்ணே ஒன்ணுங்க
ஒரு அரண்மனை வேணும் ஏதாச்சும் பண்ணுங்க

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்ரமணியன் (26-Jun-21, 10:38 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 387

மேலே