கிணற்றில் பூத்த நிலவு

கீழ்வானத்து நிலவு ,
கிடு கிடு என்றே உயர்ந்தது;
வான் வீதியில் பூத்த வண்ணப் பொழிவு;
வந்தே வாட்டும் அந்த நிலவு;
என்ன தான் ஏக்கமோ;
ஏன் இந்த துன்பமோ;
வாடியதேன்!
தேய்ந்ததேன்!
வளர்ந்ததேன்!
வடித்ததேன்!
தேடுவதுதேன்!
தெரு ஓரத்து கிணற்றின் மீது
இத்தனைக்காதலா!
வழி எங்கும் இருக்கும் கிணற்றிலும், குளத்திலும்,
வட்ட முகத்தைக் காட்டுவதேன்;
தேடும் காதலன் கிடைத்தானா! தினமும் தேடலா!
தெரியாத திகைப்புத்தான்;
புரியாத புதிர்தான்;
புறப்பட்டுத்தான் வந்து விட்டதே;
பூத்துத்தான் குலுங்கிவிட்டதே, வட்டநிலவும்;
அழகிய பூச்சரமாய்
தன் மேகம் எனும் கருங் கூந்தலில்தான்
சூடிவிட்டது
நட்சத்திரங்களை;

விடாத தேடல் தான்,
விரட்டிவரும் காதல்தான்;
தொடாத தவிப்புத்தான்;
தொட்டு விட்டால் வியப்புத்தான்;
உலாவரும் வீதியில் உல்லாசமா!
நிலாவா! உலாவா!

ஒரே பதைபதைப்பு கிணற்றுக்கு;
சந்திர பிம்மத்தைப் பார்க்க,
கிணற்றிற்கு எடுத்தது அத்தனை தவிப்பு;
கேளி செய்த தவளையும் இக்க க க என்றே கத்தியது.

தனியாத தாகம் தான்;
தறாத மோகம் தான்;
தடுமாறும் நேரம் தான்;
முகத்தழகியைப் பார்க்க இத்தனை நாட்டமா.

அதோபோர், அழகிய நிலவுக் கன்னியும்,
அடம் பிடித்தே வந்துவிட்டாள்;
அழகிய நிலவொளியைக் உமிழ்ந்து விட்டாள்;
வந்த பொழுதுதான்;
வதைத்த பொழுதுதான்;
சனநேரக்காதல் தான்;
சத்தான காதல் தான்;
சந்தனமாய் மணக்கும் காதல் தான்;
கிணற்றை எட்டிபார்த்தது வானத்து நிலவுக் கன்னி;
வந்தே விழுந்தது அதன் பிம்பம் கிணற்று நீரில்.

கிணற்றின் தாகம் தீர்ந்தது;
தடுமாற்றம்தான்;
நீரை காற்று வருடியது;
நிலைகொள்ளமுடியவில்லை, வீணடிக்க விரும்பவில்லை பொழுதை,
விணாடிக்கு விணாடி ஏக்கம்தான்;
விடிய விடிய புலம்பல் தான்;
விட்டால் ஓடிவிடும் நிலவு என்ற தாக்கமும், துக்கம் தான்
சிரித்த நிலவும்,
சிதைத்தது கிணறின் கனவை;
வந்தே பார்த்து வழுக்கிவிழாது,
வாய்விட்டு சிரித்துவிட்டு
உயரே உயர்ந்தது;
அடுத்த காதல் தேசம் எது!
குளமோ குட்டையோ! நதியோ! ஓடையோ!கிணறோ! எந்த நீர்தேக்கம்,
எங்கே கிடத்தி விடப்போகுது தாபத்தை;
கிறற்றின் ஏக்கம் கிடக்கட்டும்;
கிடைக்கும் நாளையும் நிலவுக் கன்னியின் தரிசனம்;
நித்தம் சித்தம்தான் கிணற்றிற்கு,
அம்மாவாசை, மழைமேகம் மூடியபோதும்,
கிணறு தூங்காது துக்கம் வடித்தது.

நிலவே நீல் வானத்தில் ஓடும் நீ
இன்றாவது கிணற்றின் தாபத்தை போக்கு;
விண்ணிலிருந்து இறங்கிவா!
கிணற்று காதலனுடன் ஒருவிணாடி வீற்றிருந்து போ

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (26-Jun-21, 9:54 pm)
பார்வை : 50

மேலே