கருத்தாழம் தெரிகிறது

எதிர்பார்ப்புகள்
பல நேரங்களில்
மனிதனை
ஏங்கவும்
செய்கிறது
ஏமாற்றியும்
விடுகிறது !

முடிந்த நிகழ்வுகள்
முன்னறிவிப்பின்றி
முந்தி நிற்கிறது
முட்டி மோதுகிறது
முடிவில் மடிகிறது
முட்களாய் குத்துகிறது !

வந்த வழியே
அது செல்கிறது
வலிக்கவும்
செய்கிறது !

நாட்டு நடப்புகள்
சிந்திக்கவும்
வைக்கிறது
கண்ணீர்
சிந்திடவும்
செய்கிறது !

பெருகும் குற்றங்களால்
உருகுது உள்ளம் !
தேடுது நெஞ்சம்
மறைந்த மனிதத்தை !

மாறாத மனங்களால்
வாழ்வில் வசந்தம்
வாடிய மலராகுது !

திருந்தாத உள்ளங்கள்
இருந்தென்ன லாபம்...
கவியரசரின் வரிகள்
கருத்தாழம் தெரிகிறது
உணர்ந்து எழுதியவன்
உறக்கத்தில் ஆழ்ந்தான்
புரிந்திடா இதயங்கள்
புவியில் இருக்கிறது !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (1-Jul-21, 8:13 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 171

மேலே