விசா- ரணம்

வீட்டு வாசலில் காவல்காரர், அண்ணன் இருப்பை உறுதி செய்தார் சொக்கன் மகனா என. ஒருவழியாய் நிம்மதி பெருமூச்சு நகை விற்று , கடன் பெற்று , சேமிப்பு கரைந்து, விசா கிடைத்தது. பாவம் அண்ணி நிறைமாத கண்மணி. புது வீட்டு திருஷ்டி பூசணியாய் நின்றாள். அப்பா ,அண்ணன் பெரும்பொழுது கனவுகளில்..., அம்மா மட்டும்
செல்லாத ஏக்கமாய். தெருக்கோடி இருப்பை நிறுத்த, கடல் கோடி பயணம், பாவம் அண்ணன்...., ஊரெல்லாம் ஒரே பேச்சு சொக்கன் பெருமை கூடிப்போச்சு, மற்றதெல்லாம் பெற்றதை ஏளனமாய் பார்க்க, ஒரே புகைச்சல்.., ஒருவழியாய் பயணம் கடல் கடந்து. நாள் செல்ல, நகை தொலைந்தது கடன் குட்டி போட்டது சேமிப்பு வெறும் கனவுச் சொல்லாய்.., பணம் பத்தும் செய்தது அப்பா பாசம் இழக்க, அம்மா பரிவு துறக்க, சகோதரி பந்தம் முறிக்க, மனைவி உறவு பரிக்க, குழந்தை பிரிவு தவிர்க்க, நட்பு நலிய, எதிர்காலத்துக்காக நிகழ்காலத்தை இழந்து வாழும் வாழ்க்கைச் சுடுகாட்டு சாம்பலாய், மணக்க உறவின்றி...,

எழுதியவர் : சோழ வளவன் (3-Jul-21, 10:10 pm)
சேர்த்தது : செந்தில் வளவன் பி
பார்வை : 30

மேலே