புன்னகையாள் பூப்பறிக்கின்றாள்

தென்பொதி கைத்தென்றல் மெல்லவே வீசிட
மென்மலர்கள் தென்றலில் மெல்ல மலர்ந்திட
பொன்னெழில் கீழ்வானில் செங்கதி ரும்விரிய
புன்னகையாள் பூப்பறிக்கின் றாள்

----ஒருவிகற்ப இன்னிசை வெண்பா


தென்பொதி கைத்தென்றல் மெல்லவே வீசிட
மென்மலர்கள் தென்றலில் மெல்ல மலர்ந்திட
பொன்னெழில் கீழ்வானில் செங்கதி ரும்விரிய
தென்னை இளநீர்தென் னங்கீற்றும் சேர்ந்தாட
புன்னகையாள் பூப்பறிக்கின் றாள்

------ ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

தென்பொதி கைத்தென்றல் மெல்லவே வீசிட
மென்மலர்கள் மெல்ல மலர்ந்திட - மின்விழியாள்
பொன்னெழில் கீழ்வானில் செங்கதி ரும்விரிய
புன்னகையில் பூப்பறிக்கின் றாள் !

----ஒ வி நே வெ

Thank You Yappu Folks for reading Venpas

எழுதியவர் : கவின் சாரலன் (7-Jul-21, 10:41 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 72

மேலே