பட்டினிச் சோறு
பட்டினிச் சோறு
பசியுடன் சாப்பிட அமர்ந்து
பசியுடனே சாப்பிட்டு எழும்
பெற்றோர்கள்...
செல்வத்தின் செல்வங்களாய்,
மகிழ்ச்சியின் பிறப்பிடங்களாய்
அவர்கள் குழந்தைகள்...
தவம் கிடந்தும்
தவழ்ந்து விளையாட
குழந்தையில்லா வீடுகள்...
ஏழை வீட்டில் பிறப்பெடுத்த
ஏழெட்டு குழந்தைகள்....
பல வித உணவுகளிருந்தும்
உடம்பிளைக்க பட்டினி கிடக்கும்
பெருத்த பணக்காரர்கள்...
அடுத்த வேளை
உணவிற்க்கு ஏங்கும் அகதிகள்...
காற்று வாங்க
குறுநடை பயிலும்
நகரத்து நங்கைகள்....
வெயில் மழையிலேயே
வாழ்ந்து கொண்டிருக்கும்
நடைபாதை வாசிகள்...
இருப்பவர்க்கு இன்னலாய்...
இல்லாதோர்க்கு இயலாமையாய்
பட்டினிச் சோறு...
-உமா சுரேஷ்