TAMIL NOODLES

TAMIL NOODLES
இங்கலீஷ் கவிதையா ?...இங்கலீஸாவது பிரெஞ்சாவது
நம்ம ஆயாக்கடை பொக்கைவாய் கிழவியின்
இடியாப்பம் அண்ணே இடியாப்பம் :

பல்லில்லா பொக்கைவாய்க்கு கிழவிஉன் இடியாப்பம்
பல்லிருப் போர்க்கு என்னஆப்பம் கிழவியாத்தா ?
பல்லிளிக்கும் பல்லுப் பெருமா பயலே
பல்ஆர்நோபல் திஸ்இஸ் டமில்நூடில் தின்னுடா !

இடியாப்பக் கிழவிஎன்ன இங்கிலீசா
கடகட வெனசிரித்தாள் கியவி
அடஆன் லயின்ல படிக்கேன்டா
மடப்பய பெத்த மவனே !

---க வி வ வி

எழுதியவர் : கவின் சாரலன் (8-Jul-21, 3:59 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 88

மேலே