போதுமடா தோசை எழுந்திரடா எங்கணவா

தோசை வட்டவட்டமாய் மனைவி
ஆசையாய் சுட்டுத்தந்த நெய்தோசை
மீசைமுறுக்கி தள்ளினேன் ஒருபத்து
ஆசையில் கேட்டேன் இன்னுமிரண்டு

போதுமடா தோசை எழுந்திரடா எங்கணவா
போதுமடா லாக்டவுன் சமையல் வேலை
போதுமடி கொரோனி வேறுகிரகத்தைப் போய்ப்பிடி
மாதருக்கு மண்ணில் சற்றுஓய்வு கொடடி

சட்டுவத்தை ஓங்கி ஒருபோடு போடுமுன்
சட்டென்று எழுந்து கையைக் கழுவாடா
சட்டினியையும் தீர்த்துவிட் டாய்அவளுக் கில்லாமல்
பட்டென்று எந்நேரமும் வெடிக்கும் பாரதப்போர்

அருஞ் சொல் விளக்கம்

சட்டுவம் ---தோசை திருப்பி

---முறையே வ வி க வி க வி

எழுதியவர் : கவின் சாரலன் (8-Jul-21, 2:57 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 55

மேலே