அலைஅலையாய் மனம்

அலைஅலையாய்
ஆசை உண்டாவதால் ...

மனதையும் ...ஒரு
ஆசைக் கடலென்றோம்...

அலை... ஒரே சீராய்
இருந்து விட... கவலையில்லை...

சுனாமியாய்...ஆசை ஏற...
அதன் அழிவிற்கோ ...
எல்லையில்லை...

ஆழமிக்க நடுக்கடல்
அலைகளற்று
இருப்பது போலவே ...

ஆசையற்ற ... மனமும்
அமைதியாய்த்தான்
இருந்திருக்கும் ...

மனித மனமோ...
கரையின் அலைபோல ...
ஆசைகளில்... மோதி
அலைகிறது...

மனதை அடக்கி ...
நடுக்கடல் போல்
அமைதியுற...
வழிமுறைகள்
பல இருந்தும்...

கரை அலை
மனதினையே...
தினம் அடையத்
துடிக்கிறான் ...

தன் மனக்
குப்பைகளை
அலைகளது...அடிப்பது போல் ...

கரை அலை
அடித்தொதுக்கும் ... என
நம்புகிறான்.

அலைக்கு
அழிவே இல்லை...
அது போல் ...
ஆசைக்கும்
அழிவுமில்லை.

மித அலைகளில்
லயித்திருப்போம்...

எழுதியவர் : PASALI (10-Jul-21, 6:14 am)
சேர்த்தது : PASALI
பார்வை : 86

மேலே