கவிஞனானேன்

கையால்
கவி வடித்தேன் ...
எழுத்தெதுவும்...
ஓடி வரவில்லை...

பொய்யால்
இடையிலிட்டேன்...
கவி அதுவும்
மழையாச்சே...

அடி எழுதிப்
பார்த்த போது ...
அடுத்த வரி
வரவில்லை...

அடித்து அதை
எழுதிப் பார்த்தால் ...
அடுத்த அடி
நொடியினிலே....

புள்ளி வைத்து
எழுதிப் பார்த்தால் ...
புலியில் கூட
புள்ளியில்லை...

புள்ளி அதை
மேலாய் இட்டால் ...
புள்ளிமானாய்த்
துள்ளியதே.

கவி எழுதிப்
பழக்கமில்லை...
கவிஞனோ
நானுமில்லை...

தமிழெழுதி
மடக்கிப் போட்டேன் ....
கவிஞனுக்குள்...
அடக்கி விட்டனர்.

எழுதியவர் : PASALI (12-Jul-21, 5:42 am)
சேர்த்தது : PASALI
Tanglish : kavignanaanen
பார்வை : 53

மேலே