சிலப்பதிகாரம்
நேரிசை வெண்பா
பொல்லா வினையும் ஒருக்கும் மறுபிறவி
நல்லான் விதித்த அறமதுவே. --- நால்வேத
சொல்லாம் விதைவிழ பூமி விடாமுளையும்
எல்லாமென் ஈசன் செயல்
பூமியிலிட்ட விதைபோல மறுபிறவியில் தீவினை மடியா
தொடர்ந்து வரும் என்று சிலப்பதகாரத்தில் கூறிடும் பாடல்
அத்தீவினை தீர ஐம்ப்து பெயர் கொண்டபிறவியும் எடுக்க
நேரிடலாம் அவர்களின் பெயர்கள் உதாரணமாக சொல்லியுள்ளது
அறிவன், அறவோன், அறிவு வரம்பு இகந்தோன்,
செறிவன், சினேந்திரன், சித்தன், பகவன்,தரும முதல்வன்,
தலைவன், தருமன்,பொருளன், புனிதன், புராணன், புலவன்,
சினவரன், தேவன், சிவகதி நாயகன்,பரமன், குணவதன், பரத்தில்
ஒளியோன்,தத்துவன், சாதுவன், சாரணன், காரணன்,சித்தன்,
பெரியவன், செம்மல், திகழ் ஒளிஇறைவன், குரவன், இயல் குணன்,
எம் கோன்,குறைவு இல் புகழோன்,
குணப் பெரும் கோமான்,சங்கரன், ஈசன், சயம்பு, சதுமுகன்,அங்கம்
பயந்தோன், அருகன், அருள் முனி,பண்ணவன், எண் குணன்,
பாத்து இல் பழம் பொருள்,விண்ணவன், வேத முதல்வன், விளங்கு ஒளி,
ஓதிய வேதத்து ஒளி உறின் அல்லது, போதார், பிறவிச் சுமையைப் போக்க
முடியாது - என்று சாரணர் அறநெறி கூறினார்.
கழி பெரும் சிறப்பின் கவுந்தி! காணாய்,
ஒழிக என ஒழியாது ஊட்டும் வல் வினை;
இட்ட வித்தின் எதிர்ந்துவந்து எய்தி,
ஒட்டும்காலை ஒழிக்கவும் ஒண்ணா;
கடுங் கால் நெடு வெளி இடும் சுடர் என்ன
ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள்;