வாழ்க்கை பாதை

மனிதா நீ நடந்து செல்லும்
வாழ்க்கை பாதையில்
தடையில்லை என்றால்
அது அடுத்தவர்
நடந்து சென்ற பாதை ...!!

நம் எல்லோரின்
வாழ்க்கை பாதையும்
கல்லும் முள்ளும்
நிறைந்து தான் இருக்கும்

கல்லையும் முள்ளையும்
சரி செய்து உன் பயணத்தின்
இலக்கை தொட்டுவிடு...!!

மாறாக
குறுக்கு பாதையில்
செல்ல நினைத்தால்
அது துன்பத்தில் முடியும் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (12-Jul-21, 9:46 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : vaazhkkai paathai
பார்வை : 141

மேலே