உப்புமா THE DRESSED RECIPE

உப்பிய சிமிழுடைய கோவில்மாடு உப்புமாக்காளை
உப்பிய தொப்பை இருப்பவன் உப்புமாஅப்பன்
ஒப்பிலா உப்புமாவுக்கு இணையில்லை உலகில்
உப்பும் உப்புமாவும் மனிதனுக்குத் தேவை

உப்பிட்டவரை உள்ளவும் நினை
உப்புமா இட்டவளுக்கு உறுதுணையாக
சமையல் அறையில் சென்று சமை

உப்புமாவை அலங்கரித்து கொத்தமல்லி தூவி
செரி திராட்சை எல்லாம் வைத்தாலும்
உப்புமா வெறும் ரவா உப்புமாதான்
கோதுமை அல்வா ஆகுமா ?

எழுதியவர் : கவின் சாரலன் (12-Jul-21, 9:45 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 29

மேலே