மறுபிறவி

மறுபிறவி


மறுபிறவி இந்த உலகில் மட்டுமல்ல இந்த பிரபஞ்ச முழுவதிலும் நடை
நடை பெற்று வருகிறது என்று பல ஆயிரம் வருடஙகளுக்கு முன்பாகவே
இந்தியர்கள்தான் முதன் முதலில் கண்டறிநதார்கள். இதை இந்த உலகம்
முழுவதிலும் விஞ்சான பூர்வமாகவும் கண்டறி.ந்துள்ளார்கள்.ஆனால் அது
ஏனோ பரவவில்லை. காரணம் அவர்களின் பைபிளிலும் பின்வந்த
குர்ஆனிலும் ஒரு கோட்பாடாக தீர்ப்புநாள் என்று எடுத்த எடுப்பிலேயே
கற்பிக்கப் பட்டு விடுவதால். ஏற்பதில்லை. இந்திய முஸ்லிம்கள் மொத்தமும்
இந்துக்களாக இருந்து முஸ்லீமாக மதம் மாறியவர்கள் ஆதலால் இன்னமும்
அனேகர் மறு ஜென்மம் பற்றி நம்புவதையும் பேசுவதையும் இன்றும்
காணமுடியும்.

மத்திய மற்றும் கிழக்காசிய நாடு களும் இந்தியாவில் தோன்றிய சமண
புத்த மதங்களும் கூட இந்தியரின் மறுபிறவிகளில் மாறாத நம்பிக்கை
கொண்டவர்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை...உலகினர் போற்றும்
திருக்குறளில் மறுபிறவியைப் பற்றி சுமார் 20 இடங்களுக்கு மேல் வலியுறுத்தி
பேசுகிறார்.. வள்ளுவர் எடுத்த எடுப்பிலேயே கடவுள் வாழ்த்திலேயே 10 வது
குறளில்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

இந்திய உபகண்டம் என்று நாம் பெருமையாக மார்தட்டி பேசுவது எதனால் ?
உலகில் பலரும் அறியாத ஆன்ம தத்துவங்களையும் விஞ்சானத்தையும்
இந்திய ரிஷி முனி யோகிகள் சித்தர்களும்மட்டுமே கண்டறிந்திருந்தனர்.
ஆனால் அவற்றை பாமரர் அறியார் என்று கண்டு பிடிப்புகளை பாம்பு
சந்திரனை விழுங்குகிறது போன்ற நம்பிக்கையை வளர்த்து விட்டார்கள்.
கிரணங்களின் போது பொருட்களின் மீது காஸ்மிக் கதிர் படும் என்று
வீட்டையும் கழுவவும் மக்களையும் கட்டாயம் குளிக்கவும் செய்தார்கள்.
இதுதவறா? இன்று சூரிய சந்திர கிரணங்களின் போது யாராவது
வீட்டை கழுவு கிறாரா அல்லது தானுந்தான் குளிக்கிறார்களா. படித்தவ
னெல்லாம் எந்த கதிர் தாக்கி என்ன செய்யுமென அலட்சியமாகிப்போனார்..
விஞ்சானம் அதிகம் படிக்காத வெனல்லாம் பகுத்தறிவு பேசி நாட்டைக்
கெடுத்து ஒழுங்கீனத்தை வளர்த்தான்.

இந்துக்கள் மறுபிறவி கடல் போன்ற பிறவி என்று வள்ளுவர் சொல்ல அறிந்தனர்.
சமணமுனியான இளங்கோவடிகள் ஏன் மறுபிறவி ஏற்படுகிறது என்பதை
சிலப்பதிகாரத்தில் தெளிவு படுத்துகிறார்.(ஊழ்வினை உருத்து வந்தூட்டும்) இது. புண்ணியம் என்ற வார்த்தை உலகில் யாரும் உபயோகிப்பது இல்லை.
காரணம் புண்ணியம் என்பது என்ன என்பது அவர்களுக்குத் தெரியாது.
ஆனால் பாவத்தை மட்டும் பேசுகிறார்கள். பாவம் செய்யாதே என்ற மற்ற
மதத்தார் யெதுயெது புண்ணியம் என்று கண்டறிய வில்லை. அந்தப்
புண்ணியத்தை செய்யுங்கள் என்று தங்கள் மதத்தாரிடம் பரப்பவில்லை..
இன்ன பாவம் செய்தால் இன்னின்ன பிறவி என்பதையும் பாரத இந்துக்கள்
சமணர் புத்த மதத்தார் தெரிந்திருந்தார்கள்

சிலப்பதிகாரத்தில் ஒரு ஆத்மா பாவம் செய்ய என்ன என்ன பெயரில்
மறு பிறவி எடுக்கிறது என்பதை உதாரணத்தோடு விளக்குகிறது . கோவலனையும்
கண்ணகியையும் அழைத்து சென்ற கவுந்தி அடிகளாரை நோக்கி வேசிகளுடன்
வந்த ஒரு வாயடி பார்த்தான். இவர்கள் யார் என்று கவுந்தி யடிகளைக் கேட்க
அம்மையார் அவர்கள் இருவரும் என் மக்கள் என்று பொதுவில் சொல்லினார்.
அதற்கு அந்த கும்பல் அண்ணன் தம்பிகள் கணவன் மனைவியாக நடந்து
கொள்வதென்ன என்று கிண்டல் பேசி சிரித்துள்ளனர். உடனே கவுந்தி
அடிகளார் அவர்களை நரிகளாக போங்கள் என்று சபிக்க அவர்கள் உடனே
நரிகளாக மாறி காட்டுக்குள் சென்று மறைந்தார்களாம். கோவலன் தம்பதியர்
வேண்ட அவர்களுக்கு விமோசனமும் வழங்கப்பட்டதாம்.

அந்த சமயம் வந்த சமண சன்யாசிகள் கோவலன் தம்பதியரை கணடனர்.
அவர்கள் இந்த துன்பம் முன்பிறவி செய்தபாவம் என்றும்,. ஆன்மா பாவம்
செய்வதால் அந்த பாவத்தைப் போக்க பல உடல்களைக்கொண்ட பிறவிகள்
எடுக்கிறது என்று சொன்னார்கள். உதாரணத்துக்காக அந்த பிறவியின்
பெயர்களை வரிசைப்படுத்தி வேடிக்கையாக சொன்னார்கள். அதன் குறிப்பை
பாருங்கள் ( நாடுகாண் காதையின் ஒன்பதாவது பாடல் .)


தருமம் சாற்றும் சாரணர் தோன்ற-
‘பண்டைத் தொல் வினை பாறுக, என்றே
கண்டு அறி கவுந்தியொடு கால் உற வீழ்ந்தோர்
வந்த காரணம், வயங்கிய கொள்கைச்
சிந்தை விளக்கின், தெரிந்தோன் ஆயினும்,
ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய
வீரன் ஆகலின், விழுமம் கொள்ளான்-



‘கழி பெரும் சிறப்பின் கவுந்தி! காணாய்,
ஒழிக என ஒழியாது ஊட்டும் வல் வினை;
இட்ட வித்தின் எதிர்ந்துவந்து எய்தி,
ஒட்டும்காலை ஒழிக்கவும் ஒண்ணா;
கடுங் கால் நெடு வெளி இடும் சுடர் என்ன


ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள்;
அறிவன், அறவோன், அறிவு வரம்பு இகந்தோன்,
செறிவன், சினேந்திரன், சித்தன், பகவன்,
தரும முதல்வன், தலைவன், தருமன்,
பொருளன், புனிதன், புராணன், புலவன்,
சினவரன், தேவன், சிவகதி நாயகன்,
பரமன், குணவதன், பரத்தில் ஒளியோன்,
தத்துவன், சாதுவன், சாரணன், காரணன்,
சித்தன், பெரியவன், செம்மல், திகழ் ஒளி
இறைவன், குரவன், இயல் குணன், எம் கோன்,
குறைவு இல் புகழோன், குணப் பெரும் கோமான்,
சங்கரன், ஈசன், சயம்பு, சதுமுகன்,
அங்கம் பயந்தோன், அருகன், அருள் முனி,
பண்ணவன், எண் குணன், பாத்து இல் பழம் பொருள்,
விண்ணவன், வேத முதல்வன், விளங்கு ஒளி,
ஓதிய வேதத்து ஒளி உறின் அல்லது,
போதார், பிறவிப் பொதி-அறையோர்’ என-

மறுபிறவியின் தத்துவத்தை இளங்கோவடிகள் எப்படி
விளக்கு கின்றார் என்பதை படியுங்கள். இது போன்ற
விளக்கங்கள் வேறு மதத்திலோ வேறு நாட்டிலே
பின்பற்றாத உண்மைக் கருத்தாகும்.

எழுதியவர் : பழனி ராஜன் (13-Jul-21, 8:32 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : marupiravi
பார்வை : 112

மேலே