அணைத்து தழுவி வியர்த்து - கட்டளைக் கலித்துறை

இணையை அறியவும் பெற்றோர் முயன்றால் நலந்தருமே
குணமகள் நம்மின் இணையென வந்தால் பலந்தருமே
பணமதை கேட்கா எவரையும் யாரும் புகழ்ந்திடுவர்
மணமகள் மாலையை கொண்டால் நமது இணைபாதியே

மனதுள் மகிழ்வை பணமும் பொருளதும் தந்திடுமே
தினமும் உணவும் வயிற்றினுள் தந்திடும் இன்பமதை
வினவும் எவையின் பதிலும் செவிக்கு உணவிடலாம்
தினவை அடக்க எவைக்கும் இணையது முக்கியமே.

இணைந்து பிணைந்து முயங்கி களைத்து ஒருவராக
அணைத்து தழுவி வியர்த்து நனைந்து இனிமையுடன்
தணிந்து விலகி அயர்ந்து எழுந்து மகிழ்வுடனே
பணியை முடிக்க நினைத்து முயலின் சுபமுடிவே.

மணிகளை கோர்த்திட நூலாய் ஒருவரும் மாறிவிட்டால்
பணிகள் எவையும் எளிதாய் முடிக்க பலம்வருமே
மணிதான் பணியென நூல்தான் இணையென எண்ணிடுவாய்
பிணமாய் இணைகள் இறக்கும் வரையில் இதுவருமே.
----- நன்னாடன்.

கட்டளைக் கலித்துறை என்பது கலித்துறையின் வகைகளுள் ஒன்று. கட்டளைக் கலி என்பதற்கு எழுத்தெண்ணிப் பாடப்படும் கலி யாப்பு என்று பொருள்.

எழுத்தெண்ணிப் பாடுகிற பொழுது ஒற்றெழுத்துகள் (புள்ளி வைத்த எழுத்துகள்) அனைத்தையும் விட்டுவிட்டு, உயிர் அல்லது உயிர்மெய் எழுத்துகளை மட்டும் எண்ணி எழுதுவது வழக்கம். ஒரு (செய்யுள்) அடி நேரசையில் தொடங்கினால் ஒற்று நீக்கி 16 எழுத்துகள் இருக்குமாறும், நிரையசை கொண்டு தொடங்கினால் ஒற்று நீக்கி 17 எழுத்துகள் இருக்குமாறும் பாடுவர். இதன்படி நான்கடிகள் உடைய ஒரு கலித்துறைச் செய்யுள் நேரசையில் தொடங்கினால் ஒரு செய்யுளில் மொத்தம் 64 எழுத்துகளும், நிரையசையில் தொடங்கினால் அச்செய்யுளில் மொத்தம் 68 எழுத்துகளும் இருக்கும்

எழுதியவர் : நன்னாடன் (14-Jul-21, 10:35 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 37

மேலே