உறவுகள்
அகிலத்தையும் சுற்றித்திரியும் உனக்கு உன் அண்டை வீட்டுக்காரரை பற்றி தெரியுமா
உன் குழந்தைகளுக்கு உறவுகள் பற்றி தெரியுமா
எத்தனை எத்தனை உறவுகள் இந்த பூமியில்
ஆனால் சொந்த உறவுகளைக் கூட தெரியாத எத்தனை குழந்தைகள் இப்புவியில்
கூட்டுக் குடும்பம் எனும் வார்த்தையின் பொருள் கூட தெரியாத குழந்தைகள் பாவம் அல்லவா
உறவுகளின் பாசத்தை இழந்து பரிதவிக்கும் குழந்தைகளின் நிலைமையை கண்டால் எனக்கு கண்ணீர் மல்குகிறது
அம்மா அடித்தால் பாட்டி சேலையில் மறையும் அக்கால குழந்தைகள்
என்ன செய்வதென்றே தெரியாது பரிதவிக்கும் குழந்தைகள் இக்கால குழந்தைகள்
அப்பா கண்டித்தாள் தாத்தாவிடம் குறைகூறும் குழந்தைகள் அக்கால குழந்தைகள்
என்ன செய்வதென்றே தெரியாமல் தனக்குள்ளேயே புலம்புதே
இக்கால குழந்தைகள்.....
காலத்தின் ஓட்டத்தில் உறவுகள் தொலைந்து கொண்டே இருக்கிறது.