நவீன மனிதனின் வாழ்க்கை
எந்திரம் போல் ஓடிக்கொண்டே இருக்கிறாயே
உனக்கு ஓய்வே இல்லையா
உறவுகளை பிரிந்து எதை தேடுகிறாய் எதை தேடி அலைகிறாய் நீ
காலத்தின் வேகத்தில் ஓடிக் கொண்டே இருக்கும் நீ உன் குடும்பத்துடன் கலந்துரையாடல் என்பதன் பொருளையும் மறந்து
மகிழ்ச்சி தான் உண்டோ உன்னுள்
மகிழ தான் நேரம் இருக்கிறதா உன்னிடம்
பணம் மட்டுமா வாழ்க்கை
பணமும் தான் வாழ்க்கை
அதன் முழுப் பொருளை உணர்ந்து சற்று நிதானம் கொள் மனிதா
உன் குடும்பத்தின் இன்பத்தையும் சற்று நுகர் வாயாக.