தாவரமாக மாறு
ஓரிரு நாளில்
முளைகட்டிய பயிறு
மூளைக்கு நல்லதாம்...
ஒரு சில மாதங்களில்
கதிர் பிடித்த பயிர்
உணவாகிப் போகுமாம்...
ஒரு சில வருடங்களில்
குலையாகத் தொங்கும்
தென்னை ... இளநீரும்,
தேங்காயாக... நமக்காகுமாம் ...
வருடம் பல கழித்தே
உடல் முழுவதும்
உனக்குதவும் பனை...
பல்லாண்டு ...
உனக்குதவுமாம்...
நீ...
இருக்கும் சில ஆண்டுகளில்
யாருக்கு உதவி இருக்கிறாய்?....
என யோசி...
தனிமரமாக...நிற்காது ...
பிறருக்கு
வரம் பல தரும்...
தாவரமாக மாறு.