கனி

கனி
மரத்தில் தொங்கிய மதுரசமோ;
மரம் தாங்கிய மன்மதனின் சாபமோ;
மதுரம் கூடிய முத்தாரமோ;
வண்டுகள் தொலைத்திட அச்சாரமோ;
பூத்திட பூவானமாய்;
மகரந்தச்சேர்க்கையில் உருவானாய் ;
காய்ந்திடக் பிஞ்சானாய் ;
கண்டிடக் காயானாய் ;
கனிந்திடக் பழமானாய்;
சுவைத்திட உணவானாய்;
சுமந்திட விதையானாய்;
விழுந்திட செடியானாய்;
வளர்ந்திட செடி கொடி மரமானாய் ;
வைத்திடப் பூவானாய்;
பருவம் வதைத்திட உருவானாய்;
காய்த்திட காயானாய்;
பறவைகள் கொத்திட மீண்டும் கனியானாய்;
ஏந்திட சுவையானாய் ;
கனிசுமந்த செடி கொடி மரமே;
கட்டளையிடு கவிபாடக் கட்டளையிடு;
காலமெல்லாம் கசிந்தே கவிபாடுவேன்;
உன் சுவையைச் சுவைத்து .

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (17-Jul-21, 7:33 am)
பார்வை : 228

மேலே