முதல் பார்வை
அவள் பார்த்த
முதல் பார்வையில்!!
வண்ணச் சிதறலாய் பல எண்ணங்களும்
மனசெல்லாம் மத்தாப்பு பூக்க
பட்டாம்பூச்சி சிறகடித்து பறக்க
காலிரண்டும் வான் மிதக்க
கண்ணிரண்டும் அலைபாய
கம்பன் வடித்த கவியும்
கண்முன் வந்து போக..
மாறன் எய்த அம்பு போல்
நெஞ்சை கீறிட்டு செல்ல..
கைது செய்தாள் என்னை
அவள் கயல்விழி பார்வையால்!!