கொட்டிக் கிழங்கு - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
கொட்டிக் கிழங்கு குளிர்ச்சியென்பார் தேமலுடன்
ஒட்டிநின்ற மேகம் ஒழிக்குங்காண் - வட்டமுலை
மானே யகக்கடுப்பும் வந்தவழ லுந்தணிக்குந்
தானே யிதையறிந்து சாற்று
- பதார்த்த குண சிந்தாமணி
குளிர்ச்சியுடைய நெய்தற் கிழங்கு தேமல், பிரமேகம், உடல்கடுப்பு, உட்சூடு ஆகியவற்றை நீக்கும்