கல்லூரி

கனவுகள் சுமந்து கல்லூரிக்குள் நுழைந்தேன்
ஆசிரியர்களும் நண்பர்களாய் கல்வி கற்றுக் கொடுத்தனர்.
என் தாய் கற்றேன் புத்தக கல்வி மட்டுமல்ல வாழ்க்கை கல்விகளையும்.
நட்புகள் தந்தன நம்பிக்கையையும்.
மூன்று ஆண்டுகளில் இன்பம் பெருக்கெடுத்து ஓடியது அனைவரது மனதிலும்
பொறாமை இன்றி நட்பு களோடு ஒன்றிணைந்து வாழ்ந்தோம்
இடையிடையே குட்டி சண்டைகள் வந்தாலும் அடுத்த நொடியே சண்டைகளை மறந்து நட்பே மலர்ந்தது.
ஒரு நாள் விடுமுறையில் நண்பர்களை பார்க்க வில்லை என்றாலும் மனம் துடித்தது அன்று.
பல ஆண்டுகளாகிவிட்டன கல்லூரி வாழ்க்கை முடிந்து
நண்பர்களைக் கண்டு பல நாட்கள் ஓடிவிட்டன
அன்று வாழ்ந்த வாழ்க்கையை இன்று எண்ணினால் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது ஆற்று வெள்ளமாய்.
கண்கள் தேடுகின்றது நண்பர்களை காண இயலவில்லை காலத்தின் ஓட்டத்தால்.
நண்பர்கள் பலர் இருந்தாலும் கல்லூரி நண்பர்களே கள்ளங்கபடமற்ற நண்பர்கள்.
கல்லூரி நாட்களே மிகச் சிறந்த நாட்கள்.

எழுதியவர் : மகேஸ்வரி (21-Jul-21, 1:17 pm)
Tanglish : kalluuri
பார்வை : 297

மேலே