வெட்டிவேர் விசிறி - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
வாசவெட்டி வேர்விசிறி வன்பித்த கோபமொடு
வீசும் எரிச்சலையும் வீழ்த்துங்காண் - பேசுங்கால்
தாக மகற்றுஞ் சகலம னோக்கியமாம்
மோகமருண் மாதே மொழி
- பதார்த்த குண சிந்தாமணி
மணமுள்ள வெட்டிவேர் விசிறி பித்தம், உடலெரிவு, அதிதாகம் இவற்றை நீக்கி மனபலம் உண்டாக்கும்.