பாதுகையிட்ட நடை - நேரிசை வெண்பா
பாதுகையிட்ட நடை
நேரிசை வெண்பா
பலமண்பே தத்தாற் படருகின்ற ரோக
குலமேகும் விந்துகெடுங் கூறில் - நிலவரமே
வாதபித்த ஐயமறும் மாதரசே நாடோறும்
பாதுகையை நீயணிந்து பார்
- பதார்த்த குண சிந்தாமணி
மிதியடியுடன் நடப்போர்க்கு சேற்றுப்புண் முதலான நோய்களும், சுக்கில விருத்தி, திரிதோடம் இவை நீங்கும்.