மயில் விசிறி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(’ந்’ ‘ன்’ மெல்லின எதுகை)

சந்நிவிஷங் குன்மந் தலைச்சுழலல் பித்த(ம்)விக்கல்
துன்னுசுவே தம்வாத தோஷமும்போம் - பன்னவதில்
உட்டிணமாம் புத்தி யொளிரும் பசுந்தோகை
யிட்ட மயில்விசிறிக் கே

- பதார்த்த குண சிந்தாமணி

மயிலிறகால் செய்த விசிறி விடம், சன்னி, வயிற்றுவலி, தலைச்சுழற்சி, பித்தம், விக்கல், வியர்வை, வாதம் இவற்றை நீக்கும். அறிவு விளங்கும். இது சூட்டை உண்டாக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Jul-21, 8:13 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே