காதல்

காதல் என்ற வார்த்தையே பிடிக்காது எனக்கு உன் அன்பை காணும் முன்னே
யாரிடமும் நான் தோற்றதில்லை
ஆனால் உன் பாசத்தின் முன் தோற்று நிற்கிறேன்
கல்லையும் கரைத்து விட்டது உன் கனிவான குரல்.
என் நெஞ்சையும் பிளந்து விட்டது உன் அன்பு நேயம்.
என் இதயத்திலும் காதல் மலர் பூத்து விட்டது உன்னால்
என் மனதுக்குள் நுழைந்து அன்பென்னும் ஆயுதமே உலகின் மிகப்பெரிய ஆயுதம் என எனக்கும்
உணர்த்திவிட்டாய்.
என் மனதையும் வென்றுவிட்டாய்.
என்னையும் வெற்றியடையச் செய்துவிட்டாய் உன்னுள் என்னை கொண்டு.

எழுதியவர் : மகேஸ்வரி (23-Jul-21, 8:32 am)
Tanglish : kaadhal
பார்வை : 118

மேலே