கனா காண்கிறேன்
கண்கள் மூடி காணும் கனவிலும்
உன் வாசத்தை நுகர்கிறேன்...
காற்றில் பறந்து வந்து
என்னுள் நுழைந்தாயோ...?
இல்லை
வானில் மிதந்து வந்து
என்னுள் நுழைந்தாயோ...?
செவி கேட்கும்
இசைதனில் நுழைந்தாயோ...?
இல்லை
செம்மொழி பேசும்
செவ்விதழ்தனில் நுழைந்தாயோ...?
காற்று கூட அனுமதியின்றி
வர மறுக்கும்
என் மனக்கோட்டைக்குள்
எப்படி தான் நுழைந்தாயோ..?
மணம் வீசி மனமெங்கும்
நிறைந்திருக்கிறாய்
நான் காணும் கனவில்...
மணவாளனாக என் கரம் பிடித்து...!!