தோழன்,காதலன்,கனவன்,தகப்பன்
முகவரி தெரியாதவனாய்
முன் நின்று அறிமுகமாகி
தோழ் சாயும் தோழனாய்
தொடர்ந்து பயணிக்க
நினைத்து தோற்றுபோய்
காதலனாய் கட்சி மாறி
கரம் பிடித்தபோது
கடந்த காலம்
காலைவாரி விட
கணவனாய் கடைசி வரை
காத்து இருக்க கடவுளை
வேண்டினேன்....
எதிர்காலம்
என்னை ஏமாற்றியது
இப்போது
எனக்கு பிடித்த உன்னிடம்
தோழனாகவும் வேண்டாம்...!
காதலனாகவும் வேண்டாம்...!
கணவனாகவும் வேண்டாம்...!
இனி இறக்கிறேன்...
அப்போதாவது
உனக்கு பிடித்த
உன் அப்பாவாக
பிறப்பெடுக்க...