காதலுக்கு கண் இல்லை

காதலுக்கு கண் இல்லை


உலகம் எங்கே போய்க்கொண்டு இருக்கிறது , அது எங்கும் போகவில்லை, இங்கே அது  இருக்கிற இடத்தில் தான் இருக்கிறது, அதில் வாழ்ந்து பார்க்க வந்த பட்சிகள் நாம் , மரக்கூண்டில் வாழ்ந்துவிட்டு தரைக்கூண்டில் ஓய்வு எடுத்துக் கொள்ளப்படுகிறது, அவ்வளவுதான்
பொதுவாக □□ மதியாக் காதல் □□ சுருக்கம் .......

கிராமத்து பெண் பர்வதம், நடுத்தர குடும்பம், எப்படியோ கஷ்டப்பட்டு  கலெக்டருக்கு படித்துவிட்டு, வேலையும் கிடைக்கப் பெற்றாள்.

உடனே கல்யாணமும்  செய்து வைத்து விட்டார்கள், ஒரு ஆண்  குழந்தையும் பெற்றெடுத்தாள்.

போறாத கிரகமோ என்னவோ, ரயில் விபத்தில்  கணவனை இழந்துவிட்டாள், இளம் வயதில் இப்படி ஒரு அசம்பாவிதம், குழந்தையை வீட்டு பராமரிப்பில் விட்டு தனது பணியை தொடர்ந்து வந்தாள் பர்வதம்.

வீட்டில் புதிய கானொளி பெட்டி வாங்கி, கேபிள் போட கேபிள் காரனை சந்தித்து பேசி, கேபிள் போடவைத்தாள்.

அவள் நட்பு கிடைக்க வேண்டும் என்று செய்ததோ, இல்லை தெய்வாதீனமாக நடந்ததோ தெரியாது, கானொளி   அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தது,  அதனால் கேபிள் காரனை அடிக்கடி சந்தித்த சந்திப்பு, காதலில் கொண்டு போய் விட்டுவிட்டது.

அவள் தகுதிக்கும் எதிர்மாறாகியது, இதைத்தான் காதலுக்கு கண்ணில்லை என்றார்களோ என்னவோ,  வீட்டில் உள்ளவர்கள் எவ்வளவோ புத்திமதி ஒரு வாயைப்போல  எடுத்துரைத்தும் எடுபடவில்லை,  கர்பமாகி விட்டாள், பெற்றோருக்கும் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும், அவமானமே பரிசாக கிடைத்தது.

மாமனார் மாமியாரும் தலையில்  முக்காடு போடும் அவலநிலை, அவள் எந்த கேடாவது கெட்டு விட்டு போகட்டும்,  தன் மகனுக்கு பிறந்த பேரப்பிள்ளையை, சட்டத்தை வேலியாக்கி அவளை வெளியில் தள்ளப்பட்டுவிட்டது காலம்.

அதற்கும் அவள் பச்சைக்கொடி காட்டி, சந்தோஷமாக ஒதுங்கி கொண்டாள்,
ஆனால் குழந்தை அவர்களது கிடுக்கு பிடிக்கு  சம்மதிக்கவில்லை, அம்மாவோடு இருக்கவே அடம்பிடித்து அழுததை தாங்கிக்கொள்ள முடியாமல் குழந்தையை அவளிடமே விட்டு வைக்க வேண்டிய கட்டாயம் ஆகியது.

கேபிள் காரனுக்கு ஒரு குழந்தையும் பிறந்துவிட்டது மற்றும் தகுதியும் ஊதியமும் உயர்ந்தது புதிய வீடும் கட்டி குடிபுகுந்தாள்.

அத்தோடு இரண்டாவது குழந்தையும் பிறந்தது கேபிள் காரனால் ஒரு பிரயோசனமும் கிடையாது கலெக்டர் காதலியாக கிடைத்தது அவனுக்கு ஜாக்பாட் அடித்ததுபோல் இருந்தது

அதனால் அவனது கேபிள் வேலையை விட்டுவிட்டான் காதலியின் உழைப்பில் பிழைப்பை நடத்திவந்தான்

கலெக்டர் பர்வதம்  என்ன நினைத்தாளோ  மூன்று குழந்தைகள் பேரிலும் ஆளுக்கு  ஒரு மனையும் ஐந்து ஐந்து ஏக்கர் நிலமும்  வாங்கி எழுதி வைத்தாள்

அவளுக்காக பத்து சவரனில் கழுத்து சங்கிலி வாங்கி வந்து அலமாரியில்
வைத்திருந்தாள்

அந்த சங்கிலியை அவளுக்கு தெரியாமல் ஆட்டையை போட்டுவிட்டு இருந்து இருக்கிறான், அதை அறிந்து அவனை சண்டை போட்டு வாக்கு வாதம் முற்ற வீட்டில் சேர்க்காமல் துரத்தியடித்தாள், சேர்த்து கொள்ளவே இல்லை.

சில நாளில் அவன் பிச்சை எடுக்காத குறை ஒன்னுதான் பாக்கி, ஊரார் வெறுப்பேற்ற வெறுப்பேற்ற, வெறித்தனமாக நடந்து கொண்டான் மூக்கை முட்ட குடித்துவிட்டு. காம்பவுண்ட் சுவர்  ஏறி குதித்து, உள்ளே நுழைந்து, கலெக்டர் பர்வதத்திடம்  அராஜகமாக
வாக்கு வாதம் செய்ய, அவளோ போலீசில் புகார் கொடுக்க, போனை எடுக்க விடாமல், இருந்த இரும்பு நாற்காலியால் தாக்கினான், ஆன்திஸ்பாட் மூச்சை இழந்து சாய்ந்து விட்டாள், முதல் குழந்தை அவன் நடவடிக்கையை கண்டு மயக்கம் போட்டு சாய்ந்து விட்டான், மற்றும் இரண்டு பிள்ளைகளும் உறக்கத்தில் இருந்தது.

கேபிள் காரன் கதவை உள் தாழ்ப்பாள் போட்டு விட்டு, பாத்ரூம் வென்டிலேட்டர்
கண்ணாடியை எடுத்து விட்டு, வெளியே வந்து மீண்டும் கண்ணாடிகளை பொருத்திவிட்டு, ஓட்டம் பிடித்தான்.

எதிர் டெரேசில் எட்டு வயது பையன், அவனுடைய அம்மாவின் கைப்பேசியை, அம்மாவுக்கு தெரியாமல் தூக்கி வந்து, டெரேசில் ஒலிந்து நோண்டிக்கொண்டிருந்தான்.

அப்போது கேபிள் காரன் வென்டிலேட்டர்  வழியாக வருவதைக்கண்டான், மறைந்து இருந்து அந்த காட்சியை படம் பிடித்தான் சிறுவன்.

அப்போது ஒரு பருந்து ஒரு கோழிக்குஞ்சியை பிடித்து கொண்டு போக கோழிக்குஞ்சி  டெரேசில் தவறவிட்டது மீண்டும் அப்பருந்து அக்கோழிக்குஞ்சியை தூக்கவிடாமல் துரத்திவிட்டு அக்கோழிக்குஞ்சியை படம் பிடித்து கொண்டிருந்தான்

அப்போது அவன் வைத்திருந்த கைப்பேசியில் ஒரு அழைப்பு ஒலி ஒலித்தது அம்மாவுக்கு முக்கியமான அழைப்பாக இருக்கலாம் என்று ஓட்டமாக ஓடி கைப்பேசியை இருந்த இடத்தில் மீண்டும் வைத்துவிட்டு ஓடிவந்து விட்டான்

அவ்வொலி கேட்டு தூக்கம் கலைந்து கைப்பேசியை எடுக்க  அழைப்பு நின்று விட்டது பையன் எடுத்த படம் தெரிந்தது கேபிள் காரன் தெரிந்தான் கோழிக்குஞ்சு தெரிந்தது இது மகனோட வேலை என்பதை ஊர்ஜிதப்புடுத்திக்கொண்டாள் ஆனாலும் மகனை கடிந்து கொள்ளவில்லை  கேபிள் காரனை எண்ணி சிந்திக்க லானாள்

எழுந்து வந்து படத்தில் தெரியும் லொக்கேசனை பார்க்கும் போது அங்கே கூடியிருந்த கூட்டத்தை கண்டாள்

போலீஸ் காரர்கள் குழுமியிருந்த
இடத்தை  மாடியில் இருந்து பார்வையிட்டாள் அவள் பார்வையிடுவதை ஒரு இன்ஸ்பெக்டர் பார்த்தார் அவர் மேலே பார்ப்பதை அறிந்து அவரை கையைக்காட்டி அழைத்தாள் அழைப்பை தெரிந்து கொண்ட இன்ஸ்பெக்டர் மட்டும் மாடிக்கு போனார் அவள் கைப்பேசியில் இருந்த படத்தைக் காட்டினாள் என் மகன் கைப்பேசி பித்தன் நான் உறங்கும் போது என் கைப்பேசியை எடுத்து விளையாடுவது வழக்கம் எனக்கு பயந்து மாடியில் கொண்டு சென்று விளையாடி இருக்கிறான்

இன்ஸ்பெக்டர் அப்படத்தை தன் கைப்பேசியில் அனுப்பி வாங்கிக்கொண்டு கீழேவந்து போலீஸ் காரர்களுக்கு கேபிள் காரனை தேடி கண்டு பிடித்து கொண்டுவரச்சொல்லி துரத்தினார்
அனுப்பிய மூன்றாவது மணி நேரத்தில் அவனை கொண்டுவந்து விட்டார்கள்

உண்மையை ஒத்துக்கொண்டான்
ஏழாண்டு சிறை தண்டனையும் முடிவுற்று வெளியில் வந்தான்

வந்தவனை  அவன் வரவுக்கு எமதர்மன் வழி மேல் விழி வைத்து காத்திருந்தான் கலெக்டரின் முதல் மகன் ரூபத்தில் தனது பதினாறாவது வயதில்

சமயம் சந்தர்ப்பம் அவனுக்கு உயிர்  நண்பனாக இருந்தது  அவன் உயிரை
பறிப்பதற்கு

வெளியில் யாரும் கேபிள் காரன்  அவனை கண்டுக்கொள்ள வில்லை
வேலைவித்திக்கு யாரும் கூப்பிடுவதேயில்லை வயிறு என்று ஒன்று இருக்கிறதே  அதனால் கல்லறை வெட்டி அதில் கிடைக்கும் கூலியை வைத்து  உண்டுவந்தான்

ஒரு நாள் அந்த ஊரில் சாவே கிடையாது  யாரும் சாகவேயில்லை  ஆனாலும் அவனை குழிவெட்ட  வேறு ஆள்மூலம் சொல்லி குழி  தோண்ட வைத்தான்  அவனும் தோண்டினான் வயிற்றை கழுவ வேண்டுமே என்று

அதை பார்ப்பவர்கள் ஒருவருக் கொருவர் கேட்டுக்கொண்டனர் ஏம்பா நம்ம ஊரில் யார் மண்டையை போட்டார்கள் இந்த கொலைகாரன் மாங்கு மாங்கு என்று குழிதோண்டி க்கொண்டு இருக்கிறானே யாருக்காக என்று கேட்கிறான்

கூடவந்தவன் பதில் சொல்கிறான் எனக்கு தெரிஞ்சி யாரும் சாகவில்லை ஒருவேளை தான் வெட்டும்  குழியில் தானே விழப்போகிறானோ என்னவோ யாருக்குத்தெரியும் என்றான்

கலெக்டரின் மூத்தமகன் அவனை வெட்டி அவனது தாயை கொன்றதற்கு பழிவாங்கி அவன் வெட்டிய குழிக்கு அவனையே சொந்தக்காரன் ஆக்கினான் கலெக்டரின் மூத்தமகன் 

மறுநாள் அவ்வழியாக வேலைவித்திக்கு போவோர் வருவோர் குழி மூடப்படிருப்பதை கண்டு சந்தேகம் கொண்டு போலீசில் புகார் செய்தார்கள் போலீசார் நேற்று இறந்தவர் யார் என்று அறிய ஊருள் நுழைந்து துழாவினார்கள் யாரும் சாகவில்லை என்பது தெரிந்து குழியை தோண்டினார்கள் கிடைத்த பிணம் கேபிள் காரன் அதிர்ந்து போனார்கள் உடனே போலீஸார் நாய்களை வரவழைத்து துப்பு ஆராய ஆணையிடும் போது சரமாரியாக மழை பொழிந்தது

உடனே நாயை வரவழைக்க சொன்னது கேன்சல் ஆனது காரணம் தடயங்களை  மழை வந்து அழித்து விட்டது என்பதை அறிந்து கேன்சல் செய்யப்பட்டது

பரவதத்தின் மகனை கடவுள் மழை ரூபத்தில் வந்து  காப்பாற்றினாரோ இல்லை பர்வதத்தின் ஆவி மழை ரூபத்தில்  வந்து காப்பாற்றியதோ
தெரியாது

ஆனால் ஊர் முழுக்க இதே சர்ச்சை
அதிசயமாக பேசிக்கொண்டார்கள்

குழந்தைகளின் உறவுகள் இரண்டு பக்கம் ஒன்று முதல் கணவன் இரண்டாவது கேபிள் காதலன் அரவணைக்க முன் வந்தார்கள்

இரு குடும்பத்தாரும் முட்டி மோதிக்கொண்டார்கள் அதை நிறுத்தி ஒரு நடுவர் கூறினார் அவர்கள் பேரில் சொத்து இருக்கிறது அதனால் தான் நான் நீ என்று சண்டையிட்டு கொள்கிறார்கள் என்றதும்

நோஸ்கட் ஆகிவிட்டது  அமைதி நிலவிற்று  எல்லாரும் சிந்திக்க இறங்கி விட்டார்கள் அவ்வார்த்தை அவர்களை அவமானப்படுத்தி விட்டதால் அமைதி நிலவிற்று

தாய் ஒன்று அப்பன்கள் இரண்டு பிரச்சினையே இன்று ,  இதற்கு முடிவு தான் என்ன? உரியவர்கள் இருந்த போது எழாத அனுதாபங்கள் அவர்கள் இல்லாத போது எழுகிறது என்றால் உள் குத்து இருப்பதை சிறு குழந்தைகள் கூட சட்டென்று சொல்லிவிடும்  என்பதை கலெக்டர்   பர்வதத்தின் மூத்தமகன் மனதுக்குள் நினைத்து கொண்டான் எங்களால் எங்களை காத்துக்கொள்ள முடியும் ஆக எங்களுக்காக யாரும் வக்காலத்து வாங்க வேண்டாம் என்று கட் அண்டு ரைட்டாக சொல்லிவிட்டான்

இதைக்கேட்டு எல்லாரும் பிரிந்து சென்றார்கள் முனுமுனுப்புடன்

சுயமாக பெத்து போட்டு இருந்தால் அது கிருமமாக நடந்து கொண்டிருக்கும் இப்படியாக எடுத்தெறிந்து பேசியிருக்காது என்றார் ஒருவர்

சொன்னவர் ஒன்னும் சத்தியகீர்த்தி இல்லை அவர் பொண்டாட்டி அவரை விட்டு வேறு ஒருவரோடு  ஓடிப்போய்
பஞ்சாயத்து வச்சி அழைத்து வந்து குடும்பம் நடத்திய அவர் வந்து பிறருக்கு ஞாயம் பேசக்கூடாது பிறத்தியான் தின்னுவச்ச எச்ச சோத்தை திங்கிறவங்க பொத்திக் கிட்டு இருக்கவேணும்  என்றான் பர்வதத்தின் மூத்த மகன்

அதைக்கேட்டு அவர் வாயடைத்து போனார் அத்தோடு சரி மலையே இடிந்து வீழ்ந்தாலும் எனக்கென்ன என்று எதையும்  கண்டுக்கொள்ளாமல் போகிறார்

குடிச்சபால் குறட்டையில் இருந்து மாறவில்லை அது பேசும் பேச்சைப் பாருங்க காலம் கெட்டுப்போச்சி என்று முனுமுனுத்தனர் வேடிக்கை பார்ப்போர்

நான் சின்னப்பையன் என்னை சின்னப்பையனாகவே இருக்கவிடுங்க
பெரியப்பையனாக ஆக்கிடாதீங்க என் தாயை பழிக்கிறவங்களை  கண்ணால பார்த்துக்கொண்டும் காதால கேட்டுக்கொண்டும் சும்மா போய்விடமாட்டேன்

மட்டைக்கு இரண்டா கிழிச்சிடுவாரோ அடேய் நாறுநாறா நூறு நாறாக்கி வத்தல் போட்டு காயவச்சி சுட்டே தின்னுட்டு போய்கிட்டே இருப்பேன் என்றான் ஒரு குடிகார ரவுடி

நான் மட்டும் பெரியவனா இருந்து  இருந்தேன்னு வச்சிக்கோ உங்களுக்கு  எல்லாம் பதில் சொல்லாத அளவுக்கு  நடந்து கொண்டிருப்பேன் இப்படி வெட்டிப் பேச்சு  பேசிக்கொண்டு இருந்திருக்க மாட்டேன்  என்னையும் என் தம்பி தங்கையை  எப்படி காப்பாற்றி கரைசேர்ப்பது என்று எனக்கு தெரியும் இப்போது நீங்கள் எல்லாரும்  போய் அவங்கவங்க வேலையை பாருங்க  ப்ளீஸ்

மழை ஜோவென பெய்தது பர்வதத்தின் மூத்த மகன் சாஷ்டாங்கமாக தரையில் மண்டியிட்டு கைகளை மேலே உயர்த்தி வணங்கி மரியாதை செய்தான்

கேபிள் காரன் மகன் கேட்டான் அண்ணா மழை என்ன கடவுளா மண்டியிட்டு வணங்க என்றான்

தம்பி கடவுளாகத்தான் நான் நினைக்கிறேன்  என்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய தெய்வம் அது நம்மைப் பெற்ற தாயை கொன்று நம்மை அனாதையாக்கியவனை
ஒரு வழிப் பண்ணி .........ம்...ம்....ம்
துரத்தி விட்டேன் அப்போது இந்த மழைதான் எனக்கு துணையாக இருந்தது அதனால் தான் நம்மிடம் எதையும் எதிர் பார்க்காமல் உதவியாக வந்தவருக்கு நமது தரப்பில் ஒரு சிறு நன்றியாவது சொல்வதுதான் மனிதாபிமானம்

மனிதாபிமானம் என்றால் என்ன எனக்கு ஒன்னும் புரியவில்லை அண்ணா

இந்தியாவில் வாழும் ஒரூவரோட மகன் அமெரிக்காவில் செட்டில் ஆகி தன் தாய் தந்தையை அங்கே அழைத்து கொண்டார்
வீடுவாசலை பூட்டிக்கொண்டு அவரும் அங்கே கொஞ்சம் நாள் இங்கே கொஞ்சம் நாள் இருக்கலாம் என்று முடிவு பண்ணி போய்விட்டார் அங்கே போய் இங்கே மறந்து விட்டு போன மீன் தொட்டியை ஞாபகம் வந்தது அடட மீனை அனாதையாக விட்டுவிட்டு வந்து விட்டோமே என்று மனசு தாங்காமல் மீண்டும் பிளைட் சார்ஜ் போட்டுக்கொண்டு இந்தியா வந்து தன் வீட்டைத் திறந்து மீன் தொட்டியை பக்கத்து வீட்டில் பாத்துக்கொள்ள கொடுத்து விட்டு அமெரிக்கா போனாராம் இதில் இருந்து  என்ன தெரியிது நம் உயிரை போல அதன் உயிரும் உயிர் தானே என்று  நினைத்தார் இதற்காக ஆன செலவை பார்க்க வில்லை ஒரு உயிர் மேல் அவர்  வைத்திருந்த பற்று
அதைத் தான் மனிதாபிமானம் என்பது

அப்படியா அண்ணா நானும் அப்படியே நடந்து கொள்கிறேன் அண்ணா

சரி சரி பள்ளிக்கு நேரமாச்சி  தங்கைக்கும் சொல்லி சீக்கிரம் புறப்படுங்கள் என்றான்

சரி...அண்ணா

அப்பாடா...தப்பித்தோம்

ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (26-Jul-21, 5:47 am)
பார்வை : 246

மேலே