நெஞ்சில் தஞ்சம்

என்உயிராக அழகே
என்னருகே நீயிருக்க...

காதல் குடியிருக்கும் அங்கே
என்அன்பு நிலைத்திருக்க...

மலரும் புன்னகை பூத்திடவே
வருடும் பார்வை படவே
கொஞ்சும் இதழ் தொடவே
காத்திருக்க நானும்..

நாளும்
உன்னைத் தேடி அலைந்திடவே

என்னை மறந்திடவே
காதல் கொண்டிருக்க தோனும்...

வெண்தயிர் கட்டியும்
உரைத்திடும் சந்தனமும்
நிலவின் ஒளித்திரளும்
அவள் அழகுகாட்சி யாகும்...

உயிர்ச்சிலை உன்னைக்
கண்டதும்..
சித்திரக்கலை தான்என் கைவண்ணம்...

பேதையவளே நீ போகும் பாதை
எனக்கு வழித்தட மாகும் ..

தஞ்சம் அடையவே அவ நெஞ்சில்
நாள்தோறும் கிடப்பேன் அவள நெனச்சு...

சின்னஞ்சிறு கிளியே நீ சின்னச்சின்ன முத்தம்
வைத்து கொஞ்சிடவே
உள்ளம் உருகி மெழு காகும்..

எழுதியவர் : BARATHRAJ M (27-Jul-21, 4:00 pm)
சேர்த்தது : BARATHRAJ M
Tanglish : nenchil thanjam
பார்வை : 121

மேலே