அவள் பார்வை
கள் குடித்தால் மதி மயங்குமென்பர்
கள் நான் குடித்ததில்லையடி பெண்ணே
ஆனால் ஒன்று நான் உறுதியாய் சொல்வேன்
உந்தன் விழிகளின் ஓரத்தில் சிந்தும் மதுரசம்
என் மதியை மயக்குதடி இதோ நான் இங்கே
கள்ளால் மயங்கியவன் போல .