கணவன்

வெகுதூரம் நீ சென்றாலும் உன்னைத் தேடி அலைந்ததும் இல்லை
என் விழிகளை விட்டு அகலா முகமாய் பதிந்திருக்கும் உன் முகத்தை புகைப்படத்தில் தேடியதும் இல்லை
உடலால் நீ என்னைவிட்டு பிரிந்தாலும்
என் உள்ளத்தில் மட்டும் இல்லாமல் என் உணர்வாலும் என்னுடனேயே பயணிக்கும்
உன் கரங்களை கல்யாண மாலை சூடி பிடித்த நிமிடத்திலிருந்து
உன்னைக் கனவிலும் பிரியும் மனமில்லா மனைவியாய் காலமெல்லாம் உன்னுடன்
உன் மடியில் தவழும் குழந்தையாய்
உன்னை அரவணைக்கும் அன்னையாய்
உன் தோளில் சாயும் தோழியாய்
உன்னை நேசிக்கும் வாழ்க்கையின் சுகமே சுகம்.

எழுதியவர் : மகேஸ்வரி (27-Jul-21, 7:54 pm)
Tanglish : kanavan
பார்வை : 96

மேலே