ஊடலும் கூடலும்❤❤

ஊடலும் கூடலும்❤❤

அதிகாலை தூக்கத்தை
கெடுத்த அலைபேசி அழைப்பு
பெயரை பார்த்ததும் பரபரப்பு
நேரிலே கூழக்குமிடு
சகஜம், ஆனால் அலைபேசியிலுமா
என்ன செய்யவது கார்பரேட்
கரண்சி என்றால் சும்மாவா
எஜமானர்களுக்கு  பணிந்த
டைக்கட்டிய பணக்கார வீட்டு நாயாக
பயணிப்பதே பன்னாட்டு நிறுவனங்களில்
பணிபுரிவது.
மேல் அதிகாரியின் ஆனவ பேச்சில்
அடங்கி போன ஆண்மகன் ஆமாம் சாமி
போட்டான்
கிலோ கணக்கில் கப்பல் ஏறிய தன்மானத்தை
தவனை முறையில்
கையாலாகாதவனாக கோபத்தை தன் தாரத்திடம் தாரை வார்த்தான்.
காபியா இது கசாயம்
சுத்தமா சர்கரையே இல்லை
நான் என்ன சர்க்கரை வியாதி
காரணா
என்னடி  அயன் பண்ண
முடியலைன்னா சொல்ல வேண்டியது தானே
ஏன் என் உயிரை வாங்கனும்
எப்ப பார்த்தாலும் தோசை, சட்னி
வேற டிபனே உனக்கு தெரியாதா
போயும் போயி உன்ன என் வைப்பா
சலெக்ட் பண்ணேன் பாரு
என்ன செருப்பாலையே அடிச்சிக்கனும்
ஷூ பாலீஸ் போடறத விட உனக்கு அப்படி என்னடி வேலை
எல்லாம் என் தலையெழுத்து
ச்சே இது வீடா இல்ல காடா
அவனின் அர்த்தமற்ற கோப அம்புகள்
அவளை தாக்க
அவள் கண்கள் சிவந்தன
நியுட்டனின் மூன்றாவது விதியை
அவன் மாலை வீடு திரும்பியதும்
கையில் எடுப்பாள்
வாடா, சாயந்திரமா வருவ இல்ல
இருக்குடா உனக்கு வட்டியும் முதலுமா
பூவுக்குள் பூகம்பம்பம் வெடிக்கும் தருணம் மிக விரைவில்
வெகு நேரம் காலீங் பெல் ஓசை
கேட்டும் அவள் கதவு தறக்கபடவில்லை
அவன் அலைபேசி பேசி அழைப்பும்
அவளை சட்டை செய்யவில்லை
அரைமணி நேர காத்திருப்பு
வீட்டு வாசலில்
நாயுடன்
கதவு திறக்கப்பட்டது
கண்ணகி வடிவில் அவள் காட்சியளிக்க
தவறு செய்த கோவலனாய்
உள்ளே நுழைந்தான்
எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது
சேலரி ஸ்டக்ச்சரும் ரொம்ப சேடிஸ்பையா
இருந்துச்சி
ஐயம் வெரி..வெரி ஹேப்பி நவ்
இந்த மொமன்ட்ட என்ஞ்சாய் பண்ணனும்
கம்மான் டார்லிங்
அவள் அறைக்குள் சென்று கதவடைத்து
பல நிமிடங்கள் ஆகின
தலைவன் அவள் கேட்கிறாள் என
சுவற்றுடன் உரையாடி கொண்டிருந்தான்
அரைமணி நேர கெஞ்சலுக்கு பிறகு கதவு திறக்கப்பட
பாரு.. உனக்கு படித்த மல்லிப்பூ, கனகாம்பரம், ஸ்வீட் எல்லாம்
மொத்த உருபடிகளும்
வீட்டு குப்பை கூடைக்கு இடமாற்றம்
ஆனது.
மீண்டும் அவள் அறைக்குள் சென்று
கதவடைத்தாள்.
காலையில ரொம்ப பேசிட்டமோ
ஓவரா திட்டிட்டமோ
காபி குடிக்கனும் போல இருக்கு
முடியாதே
எங்கையாவது வெளியில போகனும் போல இருக்கு
அதுவும் முடியாதே
நேரம் ஆக, ஆக பசி வயத்தை கிள்ளியது
என்னடா இது சத்திய சோதனை
இவ கதவை திறப்பாளா
இன்னைக்கு உபவாசமா
சரி ஓட்டல்ல போய் சாப்பிடலாம்னா
மனசு கேக்க மாடேங்குதே
இவள சமாதான படுத்தாம
எப்படி வெளிய போக முடியும்
ஒன்னும் பேசாமலேயே கழுத்த அறுக்குறா
ஒன்னும் புரியலையே
என்ன பண்ணலாம்
சரி திருப்பி கதவை தட்டுவோம்
கை வலிக்குது மா
கதவை திறடி செல்லம்
பிளீஸ் தங்கம் இல்லை
ஏதோ ஆபீஸ் போகிற டென்ஷன்ல
பேசிட்டேன்
அதுக்கு இப்படியா கோப படறது
கதவை திறடி செல்லம்
கதவை திறடி அம்மு குட்டி
கதவை திறடி என்....
கதவை திறந்து விட்டாள்
பாரு.... மணி ஒன்பது ஆகுது
நீ இனிமே சமைக்க வேனாம்
நான் போயி ஓட்டல் ஏதாவது வாங்கி வரேன்
இல்ல ஸ்விக்கி, சமோட்டாவுல ஆர்டர் பண்றேன்
சமையல் கட்டில் இருந்து
ஒரு தட்டு நிறைய பிரியாணியை
அவன் பார்க்க அவள் ரசித்து, ருசித்து சாப்பிட
எச்சில் விழுங்கியவனாய், ( மனதிற்குள்) அடிப்பாவி என்ன எதிரே உட்கார வச்சு இப்படி கட்டுகட்டுன்னு கட்டறியே இது நியாயமா.
நீ சாப்பிடறது பிரியாணி தானே செல்லம்.
அவள் மவுனம் சாதித்தாள்
நீ சாப்பிட்டா என்ன, நான் சாப்பிட்டா என்ன
எல்லாம் ஒன்னு தான்.
அவள் ஒரு பருக்கு கூட விடாமல்
வழித்து சாப்பிட்டவன்
மடமடக்கு என ஒரு சொம்பு
தண்ணீர் பருகினாள்.
பிரியாணி நல்லா இருந்துச்சா
அவள் பதில் அளிக்கவில்லை
சோபாவில் சாய்தவளாய்
உறக்க டீவி வைத்தாள்
சரி இவ இன்னைக்கு வேலைக்கு ஆக மாட்டா...
பிரிட்ஜ்ல ஏதாவது இருக்கான்னு பார்ப்போம்
அடிப்பாவி சுத்தமா துடைத்து
வைத்துருக்காள்.
பசி வைத்த கிள்ளுதே
அட மணி பத்து ஆகுதே
" சாரி சார் இன்னைக்கு டைம் பார் சார் "
ஸ்விக்கியும் , சமோட்டாவும் கையை விரிக்க
சரி வெளிய போய் பார்ப்போம்
தெரிந்த எல்லா ஓட்டலும் மூடியாச்சு
ரோட்டு கடையும் ஏதும் தென்படவில்லையே
இன்னைக்கு கொல பட்டிணி தான்.
மத்தியமும் மீட்டிங் அவசரத்துல சரியா சாப்பிடலை
சரி டீ கடை இருக்கு
பட்டர் பிஸ்கட், பன், டீ
ஏதோ யானை பசிக்கு சோளப்பொறி மாதிரி
எதுக்கும் பன் பார்சல்
வாங்கிக்கலாம் நடு ராத்திரி பசிச்சா
யூஸ் ஆகும்
கடவுளே அவ வீட்டு பூட்டாம இருக்கனும்
இல்ல கதவை தட்டினா
உடனே திறக்கனும்
என்ன செய்ய போறாளோ
என்னை விட ரொம்ப கோபக்காரியோ
இல்ல என் செய்கையால அவ பழி வாங்கறாளோ
ஒன்னும் புரியலையே
சைலன்ட் கில்லரோ
மவுன போரோ
இது தான் வாயால அழியறதோ
அப்பா... அவ இன்னும் தூங்கல
லைட் எரியுது
செல்லம் கதவை திறம்மா
ரா பிச்சைக்காரன் போல் குரல்
தழுதழுத்தது
நாயும் உறங்கிவிட்டது
கதவு திறக்கவில்லை
சரி இனி கதவு தட்டி பயன் ஏதும் இல்லை
தூக்கம் கண்களை தழுவ
நன்றி உள்ள ஜீவன் பக்கத்தில்
உறக்கம்
அவ்வப்போது கொசுவார்
ஊசி போட
அதையும் மறந்த நல்ல தூக்கம்
திடிரென்று உடல் முழுவதும்
நடுங்கியது
குளிர் காற்று நன்கு வீசியது
கண் விழித்தான்
அதிகாலை ஆதவன் வரப்போகும்
நேரம்
இன்னும் நாய் விழிக்கவில்லை
கதவு திறந்து இருந்தது
திருட்டு பூனை என உள்ளே நுழைந்தான்
ஏங்கே காதல் மனைவியை காணவில்லை
ஓ! அதிகாலையிலேயே குளியலா
வெள்ளிக்கிழமை விஷேசம்
அப்படியே சோபாவில் சாய்ந்தான்
நன்கு குறட்டை விட்டு தூங்கிவிட்டான்
அளறியடித்து எழுந்தான்
மணி எட்டு
இன்னும் ஒன் அவர்ல ஆபீஸ் கிளம்பனுமே
சுட,சுட காபி அவன் அருகே வைத்தாள்
பல்லு கூட விளக்காமல்
காபியை எடுத்தான்
சுவைத்தான்
குடித்தான்
அவள் சிரித்துவிட்டாள்
அவன் செய்வது அறியாது
திருட்டு முழி முழித்தான்
அவள் தலையில் தன் தேன் குழல்
விரலால் ஆசையாய் தட்டினாள்
ஊடல் கூடலாக மாறும் தருணம்
அவன் அவளை அலேக்காக தூக்கி
கட்டிலில் கிடத்தினான்
இன்னைக்கு ஆபிஸிக்கு லீவ் சொல்லிடறேன்
ஏற்கனவே நான் உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லிட்டேன்
கள்ளி...கள்ளி ரொம்ப ஸ்பீடா இருக்க
கண் இமைக்கும் நேரத்தில்
கோபத்தீ அணைந்துவிட்டதே
இது தான் தாம்பத்தியமா
காதல் பார்வையில்
காமம் இழையோட
இருபது விரல்கள் பிண்ணி பிணைந்தன
காற்று புகாவண்ணம் ஈர் உயிர்
ஓர் உயிர் ஆயின
காம கடவுளை தரிசனம் செய்ய
இருவரும் ஆயத்தம்
மானுட உயிர்களின் உட்சபட்ச இன்பம் அடைய
ஆறு அறிவு படைத்த
இரு வேறு பாலர்களின்
முடிவில்லா காம யுத்தம் ஆரம்பம்
யோக நிலையில்
இரண்டு உயிர்கள்
சிற்றின்ப பாடம்
சிறப்பாக கற்றார்கள்
தாம்பத்தியத்தின்
தாத்பரியம்
உடலால் இணைவது மட்டும் அல்ல
உள்ளத்தால் இணைவதும் தான்.
- பாலு.

எழுதியவர் : பாலு (27-Jul-21, 8:50 pm)
சேர்த்தது : balu
பார்வை : 355

மேலே