கிருஷ்ணமூர்த்தியும், கனவும்

கிருஷ்ணமூர்த்தியும், கனவும்.


" டூ அவர் முடியுமில்லை"
" ஒன் அவர் பார்ட்டி மினிட்ஸ் தான் சார்"
" என்னையா இங்கிலீஷ் படம் மாதிரி ரொம்ப சின்னதா எடுத்திருகீங்க போல"
" இந்த சப்ஜெட்க்கு இந்த டைம் போதும் சார்"
"  ஸ்டார்ட் பண்ணுங்க,
அது என்னய்யா கிருஷ்ணமூர்த்தியும் அவன் கனவும்"
" பாருங்க சார் புரியும்"
டைட்டில் முடிந்த பிறகு,
மொட்டை மாடிக்கு கிருஷ்ணமூர்த்தி பாய், தலையணையுடன் சென்று நிலவின் அழகை ரசித்தவாறு உறங்கி விட்டான்.

உறங்கிய கிருஷ்ணமூர்த்தி கனவு காண்பதாக படத்தில் காட்சி.

சங்க இலக்கியத்தில் ஒரு காட்சி.

அது ஒரு வனப்பகுதி. தலைவி தடாகத்தை நோக்கி குளிக்கச் செல்கிறாள்.  தலைவிக்கு தெரியாமல் தலைவன் அவளை பின் தொடருகிறான்.
தடாகத்தை அடையும் சமயம் ஒரு புலி அவ்வழியே வருகிறது.
புலியைப் பார்த்து அலறிய தலைவி அருகே இருக்கும் மரத்தின் மீது ஏறி கிளையில் அமர்ந்து கொண்டாள். புலி மரத்தின் கீழ் நின்று அவளை பார்த்து சீர முயற்சிக்கிறது.
பயந்து நடுங்கி, ஒடுங்கி கண்களை இறுக்க மூடிக்கொண்டு தலைவி மரத்தின் கிளையை பிடித்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தாள்.
பின்தொடர்ந்த தலைவன் அந்த காட்சியை பார்த்து துணிச்சலுடன் புலியை அங்கிருந்து துரத்த முயற்சித்தான். புலி அவன் மீது பாய தலைவன் புலியுடன் சண்டையிட்டான். ஒருவழியாக புலியுடன் சண்டையிட்ட தலைவன் புலியை அங்கிருந்து துரத்தினாள்.

சண்டையில் மிகவும் களைப்படைந்த தலைவன் மரத்தின் மீது அமர்ந்திருந்த தலைவியை பார்த்தான்.
மரத்திலிருந்து கீழே இறங்கிய தலைவி தலைவனைப் பார்த்து "நன்றி" என்றாள்.
" ஏன் தனியாக துணைக்கு யாராவது அழைத்து வந்து இருக்கலாமே"
" நீங்கள் சொல்வது சரிதான் நாளிலிருந்து என் தோழியை தோழியை அழைத்து வரலாம் என்று"
" வேண்டாம் வேண்டாம் நாளையிலிருந்து நானே உனக்கு துணையாக வருகிறேன்"
" நீங்களா எனக்கு துணையாக வா"
" வாழ்க்கை முழுவதும் உனக்கு துணையாக வரப்போகும் நான் உன்னுடன் வரக்கூடாதா?"
" வரலாம் ஆனால்"
" என்ன ஆனால்"
" இல்லை நான் இந்த வனப்பகுதிக்கு தினம் வருவது இந்த தாமரைக் குளத்தில் நீராடுவதற்கு"
" சரி அதனால் என்ன"
" நான் நீராடுவதை நீங்கள்...."
" பயம் வேண்டாம் நிச்சயம் நான் கண்ணியம் காப்பேன்"
" காதலர்கள் கண்ணியம் காப்பது எல்லாம் ஒரு நொடியில் காற்றில் பறந்துவிடும் எனக்கு அதில் நம்பிக்கை இல்லை"
" அப்போது என் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா"
" நம்பிக்கை இல்லாமல் உங்களை நான் காதலிப்பேனா. இல்லை இந்த வனப்பகுதியில் உங்களுடன் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டு இருப்பேனா"
" அப்போது நீ என்ன சொல்ல வருகிறாய்"
" காதல் எப்போது எல்லை மீறும் என்பது யாம் அறியாதது .அது நம்மிடம் இல்லை"
" உரிமை மீறல் நடந்துவிடும் என்று பயப்படுகிறாயா"
" நிச்சயம் உரிமை மீறல் நடக்கும் அதுதான் காதலின் உச்சம்"
" சரி நான் அந்த மரத்தின் பின்னால் நின்று கொள்கிறேன் நீ தைரியமாக இந்த  தாமரை குளத்தில் ஆனந்தமாக நீராடு"


தலைவி தாமரைக் குளத்தில் குளிக்க இறங்குகிறாள். அவள் ஆடை முழுவதுமாக தண்ணீரில் நனைந்து விடுகிறது.  அவளுடைய அழகிய அங்கங்கள் அவளின் ஆடையையும் மீறி தெரிய.....


"ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப் .... ,  யாருப்பா டைரக்டர்"
" இந்த சீன் கட் பண்ணனும்"
" ஏன் சார்"
" யோவ் நைஸா, சீ த்ரு( see through)... வெள்ளை புடவையை கட்டி எல்லாம் தெரிய மாதிரி"
" சார் இந்த சீன் வான்டட்டா( wanted  ஆ..) நாங்க வைக்கல, கதை படி, இது சங்ககாலத்து சீன்,அதனால கதாநாயகி இப்படித்தான் டிரஸ் பண்ண முடியும். இப்படித்தான் காஸ்டியூம் இருக்கும்"
" அதெல்லாம் சரி, அந்த ஹீரோயின் தண்ணியில முங்கி எழுந்தவுடனே குளோஸப்பில் அவங்க பிரஸ்ட் see-through பண்ணிட்டீங்க, எல்லாம் அப்பட்டமா தெரியுது. இது சட்டபடி வள்கர்( vulgar) சோ... இந்த சீன் சென்சார் ரூல்படி கட் ."
" சார் அந்த பர்டிகுலர்( particular) ஷாட் ஒரு நிமிஷத்துக்கும் கம்மிதான் சார். அதுக்கு போய்"
" நோ நோ நோ....,  கட் பண்ணியே ஆகணும்"
" அந்த சீன இன்னொரு தடவை பாருங்க சார். அந்த பொண்ணு தண்ணீரில் மூழ்கி எழுந்து நிக்கிறாங்க, ஒரு அரை நிமிஷம் குள்ள தான் க்ளோசப் வச்சிருக்கோம். அப்புறம் அப்படியே லாங் சாட் வெச்சி கேமரா அப்படியே மேல போய்  இயற்கை காட்சியை காமிக்குது. இதுல என்ன தப்பு"

" யோவ், இது கேரளா சென்சார் போர்டு இல்லையா. தமிழ்நாடு. நமக்குன்னு ஒரு கல்ச்சர் இருக்கு. பண்பாடு இருக்கு.சோ... நீங்க எதிர்பார்க்கிற மாதிரி தான் நாங்க உங்க இஷ்டத்துக்கு இருக்க மாட்டோம்"
" சார் சங்ககாலத்தில் அகநானூறு, புறநானூறு இது எல்லாமே நம்ப தமிழ்நாட்டில நடந்தது தான் சார் எல்லாமே நம்ம கல்ச்சர் (culture) தான் சார்"
" அதெல்லாம் எனக்கு தெரியாது இந்த சீன் கட்"
" சார் இந்த சீனுக்கே நீங்க சொன்னா... இதுக்கு அப்புறம் வர்ற சீன்ல மரத்துக்கு பின்னாடி இருக்கிற கதாநாயகன் கதாநாயகி குளிக்கிற இடத்திற்கு வரான் அவங்களுக்குள்ள ஒரு டூயட் இருக்கு, அதுலயும் சில காட்சிகள் இருக்கு. எங்களை பொறுத்த வரைக்கும் அது செக்ஸ் இல்லை. விதி மீறலும் இல்லை. ஆனால் உங்களை பொறுத்த வரைக்கும் அது விதிமீறல். நாங்க இந்த சங்க கால காட்சிய இப்போ இருக்கிற... நடைமுறையில் இருக்கிற காஸ்டியும்  வச்சு எடுக்க முடியுமா கொஞ்சம் யோசனை பண்ணுங்க"
"  ஓ! அடுத்து வர்ற சீன்ல அவ்வளவு விஷயம் இருக்கா..  இதோ பார் தம்பி நான் சென்சார் ஆபிஸர். நீ டைரக்டர். நான் என்னென்ன சீன் கட் பண்ணனும் நினைக்கிறேனோ அதை கட் பண்ணுவேன். ஒருவேளை எங்க சென்சார் சர்டிபிகேட் உங்களுக்கு ஒத்து வரலைனா நீங்க இந்த படத்த டெல்லிக்கு கொண்டு போயி அங்க சென்சார் பண்ணுங்க"
சரி உங்க இஷ்டமா ஏதோ பண்ணுங்க சார் எங்களுக்கு சுத்தமா திருப்தி இல்ல, நிச்சயமா இதை நான் டெல்லிக்கு கொண்டு போக தான் போகிறேன்,  பெரிய பட்ஜெட் படத்துல எவ்வளவோ அட்டூழியம் பண்றாங்க ஆனா அதுக்கெல்லாம் யூ சர்டிபிகேட் தருவீங்க"

புரண்டு படுத்த கிருஷ்ணமூர்த்திக்கு விழிப்பு வந்து விடுகிறது மணி இரவு இரண்டு இருக்கும்.  ஒரு பதினைந்து நிமிடம் தூக்கம் கலைந்த வனாய் இருந்த கிருஷ்ணமூர்த்தி மீண்டும் உறங்கிவிட்டான் இதோ இப்போது இன்னொரு கனவு காண்கிறான்.


சென்னை மெரினா பீச்.

யாழினி ஒரு நவநாகரீக இளம்பெண்.
அவள் ஒரு பத்திரிக்கையாளர்.
சென்னையில் உள்ள பிரபல பத்திரிகையில் ரிப்போர்ட்டராக பணிபுரிபவள்.  மிகவும் முற்போக்கு சிந்தனை உள்ள  துணிச்சலான பெண்.

" ஏய் எந்திரிங்க என்ன அசிங்கம் பண்றீங்க இங்க"
ஹெட் கான்ஸ்டபிள் கந்தசாமி அந்த இளம் காதலர்களை பணத்திற்காக அதட்டிக்கொண்டிருந்தார்.
" சார் நாங்க லவ்வர்ஸ் நாங்கள் எதுவும் அசிங்க எல்லாம் பண்ணல"
அந்த இளம் ஜோடி ஒருங்கிணைந்து பேச
" முதல் எழுந்திருங்க உங்க வீட்டுல படிக்க அனுப்பிச்சா நீங்க லவ் பண்றீங்களா வெக்கமா இல்ல"
" சார் நாங்க படிச்சு முடிச்சுட்டோம் சார் ரெண்டு பேரும் வேலை செய்றோம்"
" நீங்க  எக்கேடு கெட்டுனா போங்க, அதை பத்தி எனக்கு கவலை இல்லை இப்ப இந்த இடத்தை காலி பண்ணுங்க"
" என்ன சார் இந்த பீச் எல்லாருக்கும் பொதுவானது நாங்க லவ்வர்ஸ் சுதந்திரமா லவ் பண்றது கூட உரிமை இல்லையா"
" என்னடா உத வேண்டுமா என்கிட்டயே விதண்டாவாதம் பண்ற பொய் கேஸ் போட்டு உள்ள தள்ளிடுவேன்"
" சார் எங்களுக்கும் சட்டம் தெரியும் சார் ஏன் சார் இந்த மாதிரி"
கான்ஸ்டபிள் கந்தசாமி நிதானம்
இழந்தவராய், லத்தியை எடுத்து அந்த இளம் ஜோடியை நோக்கி அடிக்க முற்படும் போது.
" சார் அவங்கள அடிக்கிறதுக்கு பதில் என்ன அடிங்க ஸார்"  குறுக்கிட்டாள் யாழினி.
" நீ யாரு இவங்களுக்கு சப்போட்டா..."
" ஆமாம் அப்படிதான் வெச்சுக்குங்க"
" அப்ப உன்னையும் உள்ள தள்ள வேண்டியது தான்"
" என்ன சார் ஒரே பிலிம் காமிக்கிறீங்க, போலீஸ்னா நாங்க பயந்து விடுவோமா"
" தோ பார்,  உன் வேலை என்னவோ அதை பாத்துட்டு போ, அனாவசியமாக
இவங்க விஷயத்த தலையிடாதே"
" தலையிடுவேன் சார் . அவங்க என்ன தப்பு பண்றாங்க. அவங்க லவ்வர்ஸ் அவங்க தனியா உக்காந்துட்டு லவ் பண்றாங்க. அதுல உங்களுக்கு என்ன சட்டம் ஒழுங்கு கெட்டு போச்சு"
" உன்கிட்ட அதெல்லாம் நான் விளக்க முடியாது. மரியாதையா நீ இடத்தை காலி பண்ணு"
" அது சரி சார், அவங்க கிட்ட நீங்க பேசும் போது, வாய்ப்பேச்சு வாயில் இருக்கும் போது, எப்படி லத்தியை எடுத்து அவங்கள அடிக்க போறீங்க. யார் அந்த உரிமையை உங்களுக்கு கொடுத்தது"
" தோ பார் பொண்ணு, உனக்கு இந்த விஷயத்துல ஒரு சம்பந்தமும் இல்ல, தயவுசெய்து போயிடு, நான் இவங்கள டீல் பண்ணிக்கிறேன். அவ்வளவுதான் சொல்லிட்டேன்"
"  போக முடியாது சார், நீங்க லத்தியை
உபயோக படுத்தியதுனால, அவங்க ரெண்டு பேரு கிட்ட சாரி கேளுங்கள். இல்லன்னா உங்க மேலேயே நான் கேஸ் போடுவேன்"
" என் மேல கேஸ் போடுவியா. நீ அவ்ளோ பெரிய ஆளா"
"  நான் பெரிய ஆளோ சின்ன ஆளோ அது முக்கியம் இல்ல. உங்கள பத்தி எனக்கு நல்லாவே தெரியும். நீங்க இந்த மெரினா பீச்சுக்கு பந்தோபஸ்து தரேன்னு சொல்லிட்டு, நீங்க செய்ற அட்டூழியம் எனக்கு நல்லாவே தெரியும். அதோ அந்த செகண்ட் லைன் ரோட்ல ஒரு வெள்ளை மாருதி கார் நிக்குது அதுல என்ன நடக்குதுன்னு எனக்கு தெரியாதா. இதோ இந்த மாதிரி லவ்வர்ஸ் கிட்ட நீங்க மிரட்டி காசு வாங்கறது எனக்கு தெரியாதா. அது மட்டுமா சாயங்காலம் நாலுமணி ஆரம்பிச்சு ஆறு மணி வரைக்கும் உங்க தலைமையில் தானே இங்க விபச்சாரமே நடக்குது. எல்லாம் தெரியும் சார் என்கிட்ட வீடியோ புரூப் இருக்கு. அதனால சைலன்ட்டா இவங்ககிட்ட மன்னிப்பு கேளுங்கள். இல்லன்னா என் வேலையை நான் காமிச்சிருவேன்."

" ஏய், ஏய் நீ யாரு என்ன இப்படி மிரட்டர"
" மிஸ்டர் ஹெட் கான்ஸ்டபிள் கந்தசாமி கண்ட்ரோல் யுவர் வேர்ட்ஸ், ஏய் அப்படின்னு என்ன  இன்னொரு தடவை கூப்பிட்டால் அவ்வளவுதான்"
" இதெல்லாம் சரி வராது உங்க மூணு பேருக்கும் இன்னைக்கு டைம் சரி இல்ல வாங்க ஸ்டேஷனுக்கு போலாம்"
" தாராளமா போலாம்"

அன்று மெரினா பீச் சப்-இன்ஸ்பெக்டராக பணியில் இருப்பவர் திருமதி. உமா மகேஸ்வரி.

" ஏய் யாழினி எப்படி இருக்க ரொம்ப நாளாச்சு உன்னை பார்த்து என்ன பண்ற"
" உமா உன்னை இந்த போஸ்ட்ல நான் எதிர்பார்க்கவே இல்லை"
" நீ என்னடி பண்ற"
" ரிப்போர்ட்டர் வேலை செய்றேன்"
" வெரி குட் இவங்க ரெண்டு பேரு யாரு"
" அவரையே கேளு"
" சார்... யார் சார் இவங்க"
" மேடம்,  இந்த இரண்டு பேரும் பீச் மணல்ல"
" இன்னைக்கு உங்களுக்கு வேற கேஸ் கிடைக்கலையா"
"  நீங்க ரெண்டு பேரும் போங்க"
இளம் ஜோடி யாழினிக்கும், உமா மகேஸ்வரிக்கும் நன்றி கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.

" கந்தசாமி நீங்க போங்க"
" உமா அவரை கொஞ்சம் இருக்க சொல்லு, இவரு, போலீஸ் என்ற பெயரில் ரொம்ப அட்டூழியம் பண்ணியிருக்கார்.  இங்க நடக்கிற அத்தனை சமூக விரோத செயலுக்கும் இவரும் ஒரு காரணம். பணத்துக்கு பேயா அலைகிறார்.
நான் பீச்சுக்கு வரும்போதெல்லாம்,  ஒரு ரிப்போர்ட்டரா, இவர கீனா வாட்ச் பண்றேன்.  இவர் செய்கிற சில அட்டூழியம் எல்லாம் வீடியோ பதிவா என் கிட்ட இருக்கு. இவர, நீ கண்டிப்பா வார்ன் பண்ணனும். இல்லன்னா உன் பேர்  கெட்டு போய்டும் உமா"
" என்ன கந்தசாமி, என் பிரண்டு யாழினி உங்க பேர்ல கம்ப்ளைன்ட் அடுக்கிக் கொண்டே போறா. வெட்கமா இல்லை...  உங்களுக்கு லாஸ்ட் வார்னிங், இனிமே டூட்டியில  ஒழுங்கா இருக்கணும். என்ன... போலீஸா.. லட்சணமா  நடக்க வழிய பாருங்க சார், நீங்க போகலாம்"

பெரிய பல்பு வாங்குன கந்தசாமி அவமானப்பட்டு அந்த இடத்தைவிட்டு கூனிக்குறுகி வெளியேறினார்.

சுளீரென்று கதிரவன்  முகத்தில் அடிக்க சுறுசுறுப்புடன் எழுந்தான் கிருஷ்ணமூர்த்தி.

"  இந்த மெரினா பீச் செகண்ட் ஸ்லாட் ஓகே தான்... ஒரு சில இடத்துல மட்டும் வாய்ஸ் டம்மி பண்ணா போதும். ஆனா அந்த சங்ககால ஸ்லாட் தான் ரொம்ப உதைக்குது" சென்சார் ஆபீஸர் சொல்ல
"ஓகே சார் நீங்க என்ன நினைக்கிறீங்களோ அந்த மாதிரி சென்சார் பண்ணுங்க ஃபர்ஸ்ட் ஸ்லாட்ல  நிறைய கை வச்சா நிச்சயமா படத்த டெல்லிக்கு கொண்டு போவ நேரிடும்"
படத்தின் டைரக்டர் பதிலளித்தார்.

- பாலு.

எழுதியவர் : பாலு (28-Jul-21, 11:12 pm)
சேர்த்தது : balu
பார்வை : 138

மேலே