அஞ்சாமல் விஞ்சிடலாம்
கொஞ்சமாய் கோபப்படு எல்லோரும்
கொஞ்சுமளவு பாசத்தைக் கொடு
நெஞ்சம் நிறைவாய் ஆனந்தம் படு
பஞ்சமில்லாமல் பழகப் பழகு
வெஞ்சினம் இன்றி நேசித்திடு
கடுஞ்சினம் கொள்வது வாழ்க்கைக் கேடு
தஞ்சம் வந்தவரை தோழனாய் பாரு
கஞ்சத்தனத்தை பொறாமையாய் கொள்
பஞ்சின் எடையென துன்பத்தை எதிர்கொள்
கஞ்சியை உண்பதற்கு உழைப்பைக் கைக்கொள்
அஞ்சி வாழ்தல் அனைத்திற்கும் இடைஞ்சல்
இஞ்சியைப் போல் மருந்தாய் என்றும் இருந்திடு
விஞ்ச முடியாத அளவு வெற்றியைத் தேடு
மிஞ்ச இயலாத வகையில் அறிவினை சேரு
நஞ்சையும் முறிக்கும் உணவினை நாடு
கெஞ்சி கேட்கும் பழக்கத்தை ஒழி
பஞ்சம் வந்தாலும் உழைப்பதை பேணு
மஞ்சம் மயக்கம் சோர்வினைத் தரும்
நஞ்சை நிலத்தில் விவசாயம் மட்டும் செய்
புஞ்சை இல்லையெனின் நோய் பல பெருகும்
------ நன்னாடன்.