பொறுப்பு
நடக்கும் போது
எவரேனும்
உங்கள்
கால்களை
பார்த்திருக்கிறீர்களா?
இல்லை
இணைந்து வரும்
நிழலையெனும்
கொஞ்சம்
வேறொன்றுமில்லை
சதா தன்
கால்களை
பிரதிபலிக்காத
நிழலை
வெறித்தபடி
ஒருவன்
நெடுநேரம்
பார்த்துக்
கொண்டிருந்தான்
அவனோடு
பிறக்காத
கால்களுக்கு
நிழல் எப்படி
பொறுப்பாகும்?