எதிர்பாலினம் மொத்தமும்

இடர்கள் நிறைந்ததே இல்லற வாழ்க்கை - இணையாக
எதிர் பாலினத்தையே ஏற்றுக்கொள்கிறோம்
ஆணிடம் மிகுதியாய் உள்ளது எல்லாமும்
பெண்ணிடம் குறைவாகவே இருக்கும்
இது போல் இருவருக்கும் எதிரிடையாக
நோக்கமும் தேவையும் ஆசையும் எல்லாமும்
நூலளவுக் கூட சரியாய் பொருந்தாது
கல்வியைக் கற்பதில் பல பாகுபாடுகளும்
உதவியைச் செய்யுதலிலும் பல வேறுபாடுகளையும்
ஆழ்ந்து நோக்குபவர் அறிந்திருக்கலாம்
இதில் தாய் மனைவி மகள் எனும் வேற்றுமையின்றி
எல்லோருக்கும் இதுவே கச்சிதமாய் பொருந்தும்
ஆயினும் ஆதித்தமிழர்கள் அதற்காகவே
அரவணைத்துச் செல்லும் குடும்ப அமைப்பை
ஏற்படுத்தி ஆற்றுப்படுத்தினர் தம்மினத்தினை
அந்தோ பரிதாபம் இன்றோ குடும்பம் என்ற கூடு
அயல்நாட்டு மோகத்தால் அல்லல் படுகிறது.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (29-Jul-21, 8:45 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 51

மேலே