மக்களுக்கு அச்சமூட்டும் அரைகுறைக் கட்டுரைகள்-உலகம் அழியப் போகிறதா

மக்களுக்கு அச்சமூட்டும் அரைகுறைக் கட்டிரைகள்-உலகம் அழியப் போகிறதா?

ஒரு சிறந்த தமிழ்த் தினசரியில் இர்ண்டு நாட்களுக்கு முன் ஒரு கட்டுரையைப் படிக்க நேர்ந்தது.
மக்கள் மிகப் பெரும் மன அழுத்தத்திலும் அச்சத்திலும் உள்ளனர் இந்தக் கொரோனாப் பேரிடர்க் காலத்தில்.
அரைகுறை ஆய்வு செய்து, (ஆய்வு என்ன ஆய்வு? அறைக்குள் உட்கார்ந்து கொண்டு கணினியில் இணையத்தை இணைத்து அங்குமிங்கும் அலைந்து திரிந்து "சுட்டுக் கொண்டு" வரும் துண்டுச் செய்திகளின் தொகுப்புத்தான்!)
வீணான புரளிக் கட்டுரைகளை எழுதி மக்களின் அடிப்படை நம்பிக்கையைத் தகர்க்கும் ஒரு அருவருப்பான வேலை இது! இதைப் படித்ததும் அளவு கடந்த ஆத்திரம்தான் வந்தது! அந்தக் கொதிப்பில் அப்போதே அந்தத் தினசரிக்குக் கண்டனம் எழுதி அனுப்பினேன்.
அதுதான் இங்குள்ளது.
*****************************************************************************************************************
"உலகம் அழியப் போகிறதா?"

"அதிகரித்து வரும் இயற்கைப் பேரழிவுகள்!-
உலகம் அழியப் போகிறதா"
"அச்சம் தரும் காலநிலை மாற்றம்-
அழியப் போகிறதா உலகம்?
ஓரு செய்தித்தாளில் வந்த கட்டுரை.

ஏதேனும் ஒரு அரைவேக்காட்டு அறிவு ஜீவி விடிய விடியக் கண்விழித்துக் கம்ப்யூட்டரின் மேல் உட்ரார்ந்து கொண்டு கண்ட மேனிக்கு ஆங்காங்கே குவிந்து கிடக்கும் தகவல்களைச் "சுட்டு" வைத்துக் கொள்ள வேண்டியது.

மாதத்திற்கு ஒரு முறை,
"பனிப்பாறை வடதுருவத்தில் பெருமளவில் உருகுகிறது! அழியப் போகிறதா உலகம்?" என்றோ,
"கனடாவில் கோடையில் கடும் குளிர் அலை! அழியப் போகிறதா உலகம்?" என்றோ,
"ஆஸ்திரேலியாவில் பத்தாயிரம் வருடங்களில் காணாத பெரு வெள்ளம்! அழியப் போகிறதா உலகம்?"என்றோ,
"சீனாவில் தொடர் மழை வெள்ளம்! அழியப் போகிறதா உலகம்?" என்றோ,
"கலிஃபோர்னியாவில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ! உலகம் அழிவதற்கு இது முன்னெச்சிரிக்கையா?" என்றோ,
"கொரோனா முப்பத்தேழாம் அலை துவங்கி விட்டது! அழியப் போகிறதா மனித இனம்?" என்றோ
ஒரு குப்பைக் கோணத் தனமாக தலைப்பில் ஒரு கட்டுரையைத் தீட்ட வேண்டியது!

பத்திரிக்கைகளும்கொரோனாக்காலத்தில் "சென்ஸேஷனல் நியூஸ்" கிடைக்காமல் காய்ந்து போய்க் கிடக்கிறார்களா, இந்தக்கிரகசாரத்தை வாங்கி அப்போதே அச்சேற்றி விட வேண்டியது!

ஏனய்யா?
உங்களுக்கெல்லாம் கடந்த ஒன்றரை வருடங்களாக நாங்களெல்லாம்,
சரியான உணவின்றி, சரியான தூக்கமுமின்றி, ஓய்வில்லாமல் அலைந்து
"திறந்திருக்கும் கடை எங்குள்ளது; அங்கு அரிசி இன்று இருக்குமா; இன்று தண்ணீர் வருமா;
அப்பாவிற்குச் சர்க்கரை மருந்து தீர்ந்து விட்டது; எந்தக் கடை இன்று திறக்கும்" என்று அல்லாடுவது தெரியவில்லையா?

வேலையும் இல்லாமல், வருமானமும் இல்லாமல், ஏற்றத் தாழ்வின்றி எல்லாரும் ரேஷன் கடைகளில் "வாயை இறுக்கமாக மூடிக் கொண்டு" பழி கிடக்கிறோமே,
அது உங்களுடைய "ப்ரேக்கிங் நூஸ் ரிப்போர்ட்டர்" கண்களில் படவே இல்லையா?
அல்லது உங்களது "செய்தித் தாள் அதர்மம்" அதையெல்லாம் மதிப்பதாக இல்லையா?
உலகம் அழிந்தால் அதையும் வீடியோ எடுத்து உங்கள் பாழாய்ப் போன பத்திரிக்கையில் வெளியிடுவீர்களா? அதைப் பார்ப்பதற்கு யாரையா இருக்கப் போகிறார்கள் உலகம் அழிந்த பிறகு?

அப்படி ஒரு அழிவு வந்தால் நீங்களெல்லாம் என்னத்தைச் செய்து கிழிக்கப் போகிறீர்கள்? எங்களை உங்களுடைய பேப்பரை வைத்துக் காப்பாற்றுவீர்களா?

என்னுடைய அறுபது ஆண்டு வாழ்வில் ஐநூறு முறை "உலகம் அழியப் போகிறது" எனும் ஒரு, தான்தோன்றித் தனமான,
பேய்த் தலைப்பின் கட்டுரைகளைப் படித்தாயிற்று!

நீங்களெல்லாம் எப்போது அழிவீர்கள் என்று ஒரு உருப்படியான ஆராய்ச்சியைச் செய்யுங்களேன்; எங்களுக்கு நிம்மதியாக் இருக்கும்!

"ஐய்யோ! சளி இருமல் விடாமல் தொடர்கிறதே" கொரோனாவோ?"
இரண்டு நாட்களாக் விடாமல் உடல் வலிக்கிறதே! கொரோனாவாக இருக்குமோ?"
என்று மக்கள் அச்சத்திலேயே இரண்டு ஆண்டுகளாக் இருக்கும் ஒரு பரிதாபனமான மன இருக்க நிலையில் ஒரு சுதந்திரப் போராட்ட காலப்பத்திரிக்கை" கொஞ்சமாவது இரக்க சிந்தையுடன் நல்ல செய்திகளையும் மனத் தைரியம் தரும் விஷயங்களையும் வெளியிடா விட்டாலும் பரவாயில்லை, இப்படிப் பேதி மருந்துச் செய்திகளையாவது வெளியிடாமல் இருக்கலாமில்லையா?

இந்த மாதிரி "இண்ட்டர்னெட்டில் சுட்ட பழம்" கட்டுரைகளை நிறுத்தி விட்டு, காற்றைக்கெடுக்கும் இந்தக் கார்களையும் பைக்குகளையும் லாரிகளையும் நிறுத்தி வைக்க ஒரு இயக்கத்தைத் துவக்குங்கள்!

"மூச்சா போவதற்குக் கூட"
ராக்கெட் ஏறி நிலாவிற்குப் போவதையும்,
கார் ஏறி ஸ்பாவிற்குப் போவதையும்,
பைக் ஏறி ரெஸ்ட் ரூம் போவதையும் நிறுத்தி விட்டு அங்கெல்லாம் நடந்தூ போக மக்களை அறிவுறுத்துங்கள்!

"முப்பது விநாடிக்கு ஒரு கார்-பத்து விநாடிகளுக்கு ஒரு பைக்" என்று அந்தப் புகை டப்பாக்களைத் தயாரிப்பதை நிறுத்தச் சொல்லுங்கள்!

எந்தத் தொழிற்சாலையும் தனது கழிவுகளை நீரிலும் மண்ணிலும் காற்றிலும் கொட்டாமல் அவற்றை மறு சுழற்சி செய்து கொள்ளக் கட்டாயப் படுத்துங்கள்!
அவ்வாறு அவை உற்பத்தி செய்த பொருள் எதுவானாலும் அதை அதன் பயன்பாட்டுக்காலம் முடிந்து கழிக்கப்பட்டதும்
"பளய இரும்பு பித்தாளக்கிப் பேரீச்சம் பளோ!' --- முறையில் பழைய இரும்பு விலைக்குத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தி ஒரு இயக்கத்தைத் துவக்குங்கள்!

சமுதாயத்தில் நீங்களும் ஒரு அங்கம் தானே?
உங்களுக்கும் பொறுப்பு இருக்கிறதிலையா!
இயற்கைச் சூழல் கெட்டு உலகம் அழிந்தால் உங்களுக்குக் கவலை இல்லையா!
வெறும் எழுத்துப் பிழைப்பை விட்டுவிட்டுக் களத்தில் நேரடியாக இறங்கிச் செய்து காட்டி முன் உதாரணமாக இருங்களேன்!

செய்திகளை அப்படியே மூலை முடுக்கெல்லாம் குப்பன் சுப்பனுக்கெல்லாம் கொண்டு சேர்க்க வேண்டியது மட்டும்தானா பத்திரிகைத் தர்மம்?

முதலில் உங்களுடைய் செய்தித் தாட்களை நீங்களே திரும்ப வாங்கிக் கொண்டு ஒரு நல்ல ஆரம்பத்தை நிகழ்த்துங்களேன்!
உங்களுடைய கட்டுரைகளால் அதை எழுதிய அதிமேதாவிக்குச் சன்மானம் பெற்றுத் தருவதைத் தவிர வேறு உருப்படியான பயன்பாடு எதுவுமே இல்லை!

எழுதியவர் : செல்வப் ப்ரியா-சந்திர மௌல (30-Jul-21, 8:18 pm)
பார்வை : 59

மேலே