ஆதவனின் மாதவம் - குறள்வெண்செந்துறை
ஆதவன் புரிகிறான் என்றுமே நின்றே
மாதவம் கோள்களும் கோளமாய் சுற்றியே --- (1)
பாதையில் வந்தபடி வானிலே மென்மையாய்
யாதொனில் துர்நிலை ஏற்படின் துன்பமே --- (2)
தோதிலா சிக்கலும் தோன்றிடும் எங்குமே
சாதனம் மூலமாய் கட்டவே எண்ணினால் --- (3)
மோதலும் உண்டாகி சிதைந்திடும் எல்லாமும்
மீதமாய் நிற்பது அஃறிணை கொண்டவையே --- (4)
சோதனை தோல்வியின் பாதையில் மாறிடும்
பாதிப்பது யாதுமே வாழ்பவை என்பதாம் --- (5)
----- நன்னாடன்.