பேயன் வாழைப்பழம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
பேயன் பழமருந்தில் பித்தரோ கம்போகும்
வாயுவுண் டாகும் மலங்கழியுந் - தீயே
அகத்தில் அதிகுளிர்ச்சி ஆகும் அணங்கே
சகத்தில் இதையறியச் சாற்று
- பதார்த்த குண சிந்தாமணி
இது பித்தம், உட்சூடு இவற்றை நீக்கும்; வாதம், மிகுந்த குளிர்ச்சி, மலம் எளிதில் கழிதல் இவை உண்டாகும்