எண்வகை வாழைப்பழம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

செவ்வாழை வெள்வாழை சேர்ந்தரச தாளிமொந்தன்
ஒவ்வுமிவை நோயோர்க்(கு) உலகத்தில் - கவ்வடுக்கு
வாழைமலை வாழைபசும் வாழைகரு வாழைகளில்
ஊழிகரு வாழைநன்றாம் ஓது 1

- பதார்த்த குண சிந்தாமணி

நேரிசை வெண்பா

ஓதலுற்ற வாழையெட்டில் உற்ற கனிகளெல்லாம்
வாதநோய்க்(கு) ஆகாது வையகத்தோர் - போதவுண்ண
எண்ணமுண் டாயின் இதற்கியைந்த சத்துருவோ(டு)
உண்ணயிடர் இல்லை உரை 2

- பதார்த்த குண சிந்தாமணி

செவ்வாழை, வெள்வாழை, இரசதாளி, மொந்தன், அடுக்குவாழை, மலைவாழை, பச்சை வாழை, கருவாழை என்கிற எட்டு வகை வாழைப் பழங்களுள் முதலில் கூறிய நான்கும் நோயாளிக்கு நல்லது; பின் நான்கில் கருவாழை நன்மைதரும்; இப்பழங்கள் வாத நோயாளிகளுக்கு உதவாது

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Aug-21, 8:54 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே